தீவிரவாதத்தால் இந்தியாவை வீழ்த்த முடியாது: மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதத்தால் இந்தியாவை பணிய வைக்க முடியும் என்று நினைப்பவர்களுக்குதோல்விதான் கிடைக்கும். தீவிரவாதம் உள்ளிட்ட தடைகளைத் தாண்டி இந்தியாவளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட்டு வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 60வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்றுமூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.மிக பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர்ஆற்றிய உரையின் சாராம்சம்:

நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த நாள் மிக முக்கியமானநாள். 60வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். நமது நாட்டின் வளர்ச்சி,முன்னேற்றத்திற்காக நாம் நம்மை அர்ப்பணிததுக் கொண்டிருக்கிறோம்.

நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறோம். மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறோம்.

தேசியக் கொடிக்கு நமது வணக்கங்கள். மகாத்மா காந்திக்கும், அவருடன் சேர்ந்துநாட்ட விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களுக்கும் அவர்கள் செய்ததியாகங்களுக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். அந்த தியாகத்தால்தான் இன்றுதேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

நமது முப்படையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், உழைப்பாளிகள்,கோடிக்கணக்கான மக்கள் ஆகியோர் நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.

நாடு விடுதலை அடைந்த சில நிமிடங்கள் கழிந்த நிலையில் நமது முதலாவது பிரதமர்நேரு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, முக்கியமான கேள்விஒன்றை அவர் நாட்டு மக்கள் முன் வைத்தார்.

நமக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை (சுதந்திரத்தை) சரியாக பிடித்துக்கொண்டுஅதை எதிர்காலத்தில் சரியாக பயன்படுத்தும் அளவுக்கு நிம்மிடம் போதுமானதைரியம், விவேகமும் இருக்கிறதா என்பது தான் அந்தக் கேள்வி.

நேரு கேள்வி கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டு நானும் அதே கேள்வியைத்திரும்பக் கேட்கிறேன். எதிர்கால சவால்களை சந்திக்க நாம் தயாராக இருக்கிறோமா?அதை சந்திக்கும் தைரியம் நம்மிடம உள்ளதா?

அப்படி இருந்தால் அதை சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறோமா? நமதுசுதந்திரப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்த சிந்தனைகளையும், யோசனைகளையும்நாம் இப்போதும் சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை நோக்கி இந்தியாவை எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோமா?

புதிய உலகுக்கு முன்பு புதிய இந்தியாவை, வலிமையான இந்தியாவை நிறுத்திக்காட்ட தேவையான உழைப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா? இவை தான்நான் கேட்க விரும்பிய கேள்விகள்.

நமது பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைசந்தித்துள்ளது. 8 சதவீதத்திற்கு மேல் பொருளாதார வளர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது ஒரு மிகப் பெரிய சாதனை அளவாகும். இந்திய வரலாற்றில் இது ஒரு அரியநிகழ்வு.

இந்தியாவின் எந்தப் பகுதிக்கு நான் சென்றாலும் அங்கு வளர்ச்சி தெரிவதை என்னால்காண முடிகிறது. நமது தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் வளர்ந்துகொண்டுள்ளன. நமது தொழில் துறையினரிடையே அபரிமிதமான நம்பிக்கைகாணப்படுகிறது.

உலகின் பிற பகுதிகளிலிருந்து வரும் சவால்களை சந்திக்கும் திடம் அவர்களிடம்உள்ளது. உற்பத்தித்துறை கடந்த காலிறுதி ஆண்டில் 11 சதவீத வளர்ச்சியைத்தொட்டுள்ளது. ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நமது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க தீவிரவாதம் என்ற அஸ்திரம் ஏவப்படுகிறது.ஆனால் இதை சமாளிக்கும் திறமையும், தைரியம் நமக்கு உண்டு. தீவிரவாதத்தைவேரோடு அழித்து, நசுக்கி ஒடுக்கி பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்துவோம்.

முன்புபோல தீவிரவாதத்தை மென்மையான போக்குடன் நாம் அணுக முடியாது.கடுமையான முறைகள் மூலம் தீவிரவாதம் அழிக்கப்படும்.

உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகஇருப்பது தீவிரவாதம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகளையும், புலனாய்வுஅமைப்புகளையும் நவீனப் படுத்துவது அவசியம்.

மும்பையில் தீவிரவாதம் மீண்டும் ஒருமுறை தலை தூக்கிய போது அதற்கு மும்பைமக்கள் காட்டிய நிதானம், பொறுமையும், மத நல்லிணக்கம் நாட்டுக்கே மிகப் பெரியஉதாரணமாக திகழ்ந்தது. எல்லை கடந்த தீவிரவாதத்தை ஒழிக்க நமது அண்டை நாடுஇன்னும் கடுமையாக செயல்பட வேண்டும்.

அப்போது தான் அமைதிப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றப் பாதையில் செல்லமுடியும். இதே போல நக்சலட்டுகளையும் நமது பாதுகாப்புப் படையினர் அடியோடுஅழிப்பார்கள்.

பொருளாதாரத்தில் நாம் வளர்ச்சிப் பாதையில் உள்ளோம். பண வீக்கம்கட்டுப்படுத்தப்படும். விவசாயிகள் நலிவடைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியாவுக்கான சூழல் சாதகமாகவே உள்ளது.

இந்தியா வளர வேண்டும் என உலகநாடுகள் விரும்புகின்றன. வறுமைக்கு எதிராகமிகப் பெரிய போரை தொடுக்க வேண்டும். வறுமை ஒழிப்புக்கு பல திட்டங்களைஇந்த அரசு அமல்படுத்தி வருகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இருப்பினும்இந்தியாவில் காஸ், மண்ணெண்ணை விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த 60 ஆண்டுகளில் உலகின் பல நாடுகள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளன.ஐரோப்பிய கண்டத்தில் இருந்த பல சாம்ராஜ்யங்கள் வீழ்ந்துள்ளன. ஆசியாவில் பலபுதிய சக்திகள் உருவாகியுள்ளன. ஜப்பான் இப்போது அடைந்திருக்கும் வளர்ச்சிபிரமிக்க வைக்கிறது.

சீனா முன்பு இருந்ததையும், இப்போது இருப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முந்தைய நிலை எப்படி இருந்தது? இப்போது எப்படிஇருக்கிறது. இவர்களைப் பார்க்கும் போது நமது முழுத் திறமையையும் நாம் சரியாகப்பயன்படுத்தியுள்ளோமா என்ற எண்ணம் எனக்குள் வருகிறது என்றார்பிரதமர்.

பிரதமர் உரைநிகழ்த்தியதையொட்டி செங்கோட்டை மற்றும் டெல்லி முழுவதிலும் மிகபலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி நகரின் மீது விமானங்கள் பறக்கதடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர்கள், பல்வேறு நாட்டுதூதர்கள்,அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பிரதமரின்உரையை கேட்டனர்.

ஆஸ்திரேலியாவில்...

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், கேன்பெர்ரா, சிட்னி ஆகிய நகர்களில் வாழும் இந்தியர்களும் தேசியக்கொடியேற்றி தங்களது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

கேன்பெர்ராவில் யெர்ராலும்லா பகுதியில் உள்ள சேன்செரி கட்டடத்தில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர்சுக்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதி கலாமின் சுதந்திர தின உரையை வாசித்தார். மெல்போர்னில்கெளரத் தூதர் டி.ஜே.ராவ் தேசிய கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்று சுதந்திர கீதம் பாடினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+