கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியது தெ.ஆப்பிரிக்கா!
கொழும்பு:
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்துதென்னாப்பிரிக்கா விலகி விட்டது. இதையடுத்து இந்தியாவும், இலங்கையும் 5போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள்கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14ம் தேதி முதல் போட்டிநடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்று கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்புமற்றும் தொடர்மழை காரணமாக இலங்கை-தென்னாப்பிரிக்கா இடையிலானமுதலாவது போட்டி ரத்து செய்யப்பட்டது.குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முத்தரப்பு தொடரில் தொடர்ந்து நீடிக்கதென்னாப்பிரிக்கா தயக்கம் காட்டியது. இதுதொடர்பாக உறுதியான முடிவைஎடுக்காமல் இருந்து வந்தது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷேமுன்னதாக கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போட்டியில் தொடர்ந்து நீடிக்கலாம் என தென்னாப்பிரிக்கஅணியின் ஜூனியர் வீரர்கள் அணி மேலிாடத்தில் தெரிவித்தனர். ஆனால் மூத்த வீரர்கள் இதற்குஉடன்படவில்லை.
பாதுகாப்பு குறைவான சூழ்நிலையில் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறி விட்டனர்.தங்களது நிலையில் அவர்கள் பிடிவாதமாக இருந்ததால் தான் போட்டியிலிருந்து விலகும் முடிவைதென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகதென்னாப்பிரிக்கா அறிவித்ததை தொடர்ந்து.அந்த அணி உடனடியாக நாடுதிரும்புகிறது.
இதைத் தொடர்ந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா - இலங்கை இடையிலானதொடராக மாற்றப்பட்டுள்ளது. இரு அணிகளும் 5 ஒரு நாள் போட்டிகளில்விளையாடவுள்ளன. அனைத்துப் போட்டிகளையும் சிங்கள விளையாட்டுமைதானத்தில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கிரிக்கெட் போட்டி இன்றும் ரத்து:
இந் நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாகரத்து செய்யப்பட்டது. நாளை இப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications