8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது!
ராமேஸ்வரம்:
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 8 ராமேஸ்வரம் மீனவர்களைஇலங்கை கடற்படை அத்து மீறி கைது செய்தது. அவர்களது படகுகளையும்கடற்படையினர் கடத்திச் சென்று விட்டதால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமமக்கள் கொந்தளிப் படைந்துள்ளனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைகடற்படையினர் அடிக்கடி பிடித்துச் செல்வதும், சுட்டுக்கொல்வதும் தொடர் கதையாகிவருகிறது.இந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஏராளமான மீனவர்கள் மன்னார்வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய எல்லைக்குள் தான்அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு இலங்கைகடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர் பாலமுருகன், ஏசு, முருகன்,குமார், கந்தன், ரோகன், ராமசாமி, நாகு ஆகிய 8 மீனவர்களை மட்டும் தங்களதுபடகில் ஏற்றிக் கொண்டனர். அவர்களது படகுகளையும் கடத்திக் கொண்டுஇலங்கைக்கு சென்று விட்டனர்.
தப்பி வந்த மற்ற மீனவர்கள் கரைக்கு வந்து நடந்ததைக் கூறினர்.இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மட்டுமல்லாது, ராமநாதபுரம் மாவட்ட கடலோரகிராமங்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அனைத்துமீனவர்களிடையேயும் கொந்தளிப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications