வழக்கு போடுவேன்-சபாநாயகருக்கு ஜெ மிரட்டல்
சென்னை:
அமைச்சர் அன்பழகன், சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோரை கடுமையாக தாக்கிஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 26.5.2006 அன்று காலையிலேயே அதிமுகவைச் சேர்ந்த 60உறுப்பினர்களையும் ஒட்டுமொததமாக வெளியேற்றினார் சட்டசபைத் தலைவர்ஆவுடையப்பன். இது தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் 121, 122 ஆகியவற்றின் கீழ்தவறான செயலாகும்.
விதி 121ன்படி பேரவைத் தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிப்பட்டஉறுப்பினரை பெயரைச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அந்த ஒருதனிப்பட்ட உறுப்பினரை மட்டும் வெளியேற்ற இயலும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம்விளைவிக்கிறார்கள் என்றால், அவையை சிறிது நேரமோ அல்லது சில மணிநேரங்களோ அல்லது மறு நாள் வரையிலோ ஒத்திவைக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் எவ்வித காரணமின்றி பெயர்களைகுறிப்பிடாமல், அவர்கள் என்ன செய்தார்கள் என்ப்தைக் கூட தெரிவிக்காமல்,அவர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி தீர்மானம் முன் மொழியாமல் அவை நீக்கம்செய்வது எந்த சட்டப் பிரிவிலும் வராது.
ஏதோ எதிரி நாட்டின் படையெடுப்பின் போது நுழைவது போல வராண்டாக்களில்உள்ள காவலர்களை சட்டசபைக்குள் அனுப்பி, சட்டமன்ற கடமையாற்றும்உறுப்பினர்களை கையைப் பிடித்து இழுத்து வெளியில் போடுவது எந்த சட்டவிதிகளின் கீழ் வருகிறது என்பதை அவை முன்னவரும், உதவிப் பேராசிரியருமானஅன்பழகன் மற்றும் சட்டசபைத் தலைவர் ஆகியோர் தெரிவித்தால் நல்லது.
நான் உதவிப்பேராசிரியர் என்று அழைப்பதற்கு காரணம், அன்பழகன் எப்போதுமேபேராசிரியராக இருந்தவர் இல்லை.
பச்சையப்பன் கல்லூரியில்அவர் உதவிப் பேராசிரியரகத்தான் பணியாற்றினார்.ஒருபோதும் அவர் பேராசிரியர் பதவியை வகித்ததில்லை. ஆனால் அவரைச்சுற்றியுள்ளவர்களும் பேராசிரியர் என்று கூப்பிட்டு வருவதால் நானும் அப்படிக்கூப்பிட முடியாது.
அவர் என்ன பதவி வகித்தாரோ அதை சொல்லித்தான் கூப்பிட முடியும். இதைஇல்லை என்று அன்பழகன் மறுத்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும்.
சட்டசபையில் இப்போது அடிக்கடி சட்டமன்றத்திற்கு அப்பாற்பட்டுள்ளமனிதர்களைப் பற்றி எவ்வித தயக்கம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல், அரசாங்கக் கோப்புகளில் உள்ள அம்சங்களை ரகசியக் காப்புபிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில்கோப்புகளைப் படிப்பதும், சட்டசபையில் அதைக் கொண்டு வந்து உரக்கபடிப்பதுமாக இவர்கள் இருக்கிறார்கள்.
சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக. அதற்குஅடுத்தபடியாக உள்ளது காங்கிரஸ். இவை இரண்டும்தான் சட்டமன்றத்தின் மொத்தஉறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் உறுப்பினர்களைக் கொண்டகட்சிகளாகும்.
மற்ற கட்சிகள் அனைத்தும் குரூப் எனப்படும் குழுக்கள். ஆனால் இன்றுசட்டசபையில், முதல் வரிசையில் அதிமுகவுக்கு 3 இடங்கள் மட்டுமேதரப்பட்டுள்ளன. அதற்கு சமமாக உள்ள குரூப் என சொல்ல்படும் குழு அளவிலானகட்சிகளுக்கும் மூன்று இடங்கள் தரப்பட்டுள்ளன. இதுதான் சட்டசபைத் தலைவர்மரபைக் கடைப்பிடிக்கிற லட்சணம்.
3 முறை உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் பணியாற்றிய ஜெயக்குமார்மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமி, வைத்திலிங்கம், பொள்ளாச்சிஜெயராமன், செ.ம.வேலுச்சாமி ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில்சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தபேரவைத் தலைவர் அளித்திக்கும் இடம் வராண்டா பக்கத்தில் தடுப்பு போட்டு,கடைசி வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்.
ஆனால் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் தாராளமாகவும், ஏராளமாகவும் இடம் தரப்பட்டிருக்கிறது.
இதுதான் பேரவைத் தலைவரின் லட்சணம். எத்தனை நாட்களுக்கு இவர்களைப்பொறுத்துக் கொண்டிருப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி.
இவர்களுடைய சட்ட அத்துமீறல்களையும், சட்டமன்ற மரபு மீறல்களையும் ஒருபொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இதற்கு சீக்கிரமே சட்டரீதியாக நான் ஒரு முடிவு கட்டுவேன் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications