லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்-கொய்தாவின் நம்பர் 3 தீட்டிய திட்டம்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களை நடுவானில்வெடிக்கச் செய்யும் சதித் திட்டத்தை அல்-கொய்தா அமைப்பின் 3வது முக்கியத்தலைவரான அபு பராஜ் அல் லிப்பி என்பவர்தான் தீட்டியதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லவிருந்தவிமானங்களை திரவ எரிபொருள் மூலம் நடுவானில் வெடிக்கச் செய்யும்தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை இங்கிலாந்து உளவுப்பிரிவான எம்ஐ-5 தக்கசமயத்தில் கண்டுபிடித்து அத்திட்டத்தை முறியடித்து.

இந்த சதித் திட்டம் தொடர்பாக 24 பேரை இங்கிலாந்து போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து உலகம் முழுவதுமே விமானங்களுக்கும், விமான நிலையங்களுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கும் பல புதிய கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சதித் திட்டத்தின் மூளையாக இருந்த நபர் குறித்த தகவல்களைபாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவுப் பிரிவு தகவல்களின்படி இந்த சதித்திட்டத்தை அல்-கொய்தாதலைவர் ஒசாமா பின் லேடன் தீட்டவில்லை. ஆனால் அதன் 3வது நிலை தலைவரானஅபுபராஜ் அல் லிப்பிதான் இத்திட்டத்தை தீட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸதான் அதிபர் முஷாரப்பை கொல்ல சதித் திட்டம்தீட்டியதும் இந்த அல்லிப்பிதான். அந்தத் தாக்குதலிலிருந்து முஷாரப் உயிர் தப்பினார்.ஆனால் 17 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மே மாதம் மர்தான் நகரில் அல் லிப்பிகைது செய்யப்பட்டார்.

இருப்பினும் இவர் போட்டுத் தந்த சதித் திட்டத்தை வைத்து இங்கிலாந்துவிமானங்களைக் கடத்தி நடுவானில் வெடிக்கச் செய்யும் ஆரம்பகட்ட வேலைகளில்அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சதித் திட்டத்தின் முக்கிய ஆளான ரஷீத் ரெளஃப் பாகிஸ்தான் போலீஸார் வசம்சிக்கியதைத் தொடர்ந்துதான் இந்த சதித்திட்டம் வெளிப்பட்டது. இலலாவிட்டால்பெரும் அசம்பாவிதங்கள் நேர்ந்திருக்கும்.

இருப்பினும், சதிகாரர்கள், விமானங்களை வெடி வைத்துத் தகர்க்கத் தேவைப்பட்ட திரரசாயானப் பொருட்கள் தயாரிப்புக்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டிருந்தநிலையில்தான் சிக்கியுள்ளனர்.

ரஷீத், பாகிஸ்தானின் மிர்பூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துநாட்டு குடியுரிமை அவரிடம் உள்ளது. கடந்த 1981ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில்வசித்தவர். 2002ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அன்றுமுதல்பாகிஸ்தானில்தான் இருக்கிறார்.

இங்கிலாந்தில் இருந்தபோது ரஷீத் தனது உறவினரைக் கொன்றதாக போலீஸாரால்தேடப்பட்டு வந்தார்.

இந்த சதித்திட்டத்திற்கான பணம், காஷ்மீர் பூகம்ப நிவாரண நிதியிலிருந்துபோயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து தீவிரவாத நிதித் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லாகூர்வந்து இங்கிலாந்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ளதொடர்புகள், பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ரஷீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இங்கிலாந்துகேட்டுக் கொண்டுள்ளது.

ரஷீத் இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றவர் என்பதால் அவரை தங்களிடம்ஒப்படைக்குமாறு இங்கிலாந்து கோரியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் விவாதிக்க ஸ்காட்லாந்து போலீஸ் குழுஇஸ்லாமாபாத் வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+