யாழ்ப்பாணத்தில் 300 வீரர்கள் பலி: புலிகள்ராணுவம் மறுப்பு-அமெரிக்க அமைச்சர் வருகை
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.300க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால், அதை ராணுவம்திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நேற்றிரவு முதல் இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மீண்டும்கடும் மோதல் நடந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் உட்பகுதியில் விடுதலைப் புலிகள், ராணுவத்தினரின் நிலைகள்மீது கடும் தாக்குதல் நடத்தி வருவதாகத கவல்கள் வெளியாகியுள்ளன.அதே போல ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
பலாலி விமான தளம் அருகே விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவத்திற்கு பலத்தசேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சண்டையில் 300க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால்இதை ராணுவம் மறுத்துள்ளது. தாக்குதல் தொடங்கிய ஒரு வாரத்தில் 106 வீரர்கள் மட்டுமே பலியாகியதாகராணுவம் கூறியுள்ளது.
ஏற்கனவே நடந்த தாக்குதலில் சேதமடைந்த பலாலி விமான தளத்தில் இலங்கை விமானப் படை விமானம் ஒன்றுநேற்று மாலை தரையிறங்கியது. இதையடுத்து அங்கு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை தொடங்கினர்.தாக்குதலைத் தொடர்ந்து அந்த விமானம உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது.
பலாலி விமான தளத்திற்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது ராக்கெட் வீசி விடுதலைப் புலிகள் தாக்குதல்நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல கமலை, கிலாய் பகுதிகளிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள இயக்காச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளை மீட்க ராணுவம் கடும் தாக்குதலைமேற்கொண்டது.
ஆனால் புலிகளும் திருப்பித் தாக்கி வருவதால் அங்கு கடும் சண்டை மூண்டுள்ளது.
இதே போல திரிகோணமலை துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விடுதலைப்புலிகள், ராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். விடியவிடியஇந்த சண்டை நடந்தது.
இதற்கிடையே, யாழ்ப்பாணம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தொடர்ந்ததுண்டிக்கப்பட்டுள்ளது. தரை மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ராணுவத்தினருக்கு கடல் அல்லது வான்மார்க்கமாகவே உதவ முடியும் என்ற நிலையில் இலங்கை அரசு உள்ளது.
உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இரு தரப்பும் கடுமையாகமோதி வருவதால் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்துவெளியேறி காடுகளில் தொடர்ந்து தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மூதூர் பகுதியில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த 17தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தவிடாமல் தடுப்பதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ஸ்டீவன் மான் இன்றுகொழும்பு வருகிறார். அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இதற்கிடையே திரிகோணமலை பகுதியில் தாக்குதல் மிகத் தீவிரமாக இருப்பதால்அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுமுடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, கொழும்பில் பத்திரிக்கை ஆசிரியர்களிடையே அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், யாழ்ப்பாணத்திலிருந்துபடைகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. போரை ஆரம்பித்தது அவர்கள்தான். எனவே அவர்கள்தான் முதலில்நிறுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதை விடுதலைப் புலிகளுக்கு தரைவார்த்து விடமுடியாது என்றுகூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications