ஜெ மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சபாநாயகர் ஆவுடையப்பனையும் அவை முன்னவரான அமைச்சர் அன்பழகனையும் மிரட்டும் வகையில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட விவகாரம் இன்று சட்டசபையில் கிளப்பப்பட்டது.

அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் எழுந்து, சபாநாயகரின் அதிகாரம் குறித்து கேள்விஎழுப்பியும் அவரை விமர்சித்தும் அறிக்கை விட்டதன் மூலம் சட்டசபையின் மாண்பையும் மரியாதையையும்ஜெயலலிதா அவமதித்துவிட்டார்.

இதனால் அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.

அப்போது நடந்த விவாதம்:

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அவையில் இல்லாதவரைப் (ஜெயலலிதா) பற்றி இங்கு பிரச்சனைஎழுப்புகிறார்கள். வெளியே அரசியல் விமர்சனம் செய்ய அவருக்கு உரிமை உண்டு. எதையாவது பேசக் கூடாதுஎன்று சபாநாயகர் குறிப்பிட்டிருந்தால் அதைப் பேசக் கூடாது. ஆனால், அவையின் கண்ணியத்தை குறைக்கும்வகையில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசவில்லை.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: ஜெயலலிதாவின் அறிக்கை கண்ணிய குறைவானது தான். கடந்த ஆட்சியில்முரசொலியில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக சந்தானத்தை (பார்வர்ட் பிளாக்) விட்டு உரிமை மீறல்கொண்டு வந்தார்கள். அதிமுக ஆட்சியில் தான் இந்த முன் உதாரணம் நடந்தது.

(அதிமுகவினர் எழுந்து கூச்சல்)

அமைச்சர் அன்பழகன்: சட்டமன்ற உரிமையை காப்பாற்ற (ஜெவுக்கு எதிரான) உரிமை மீறல் பற்றி பேச அனுமதிகொடுக்கலாம்.

ஓ.பி: அவையில் உரிமை மீறல் குறித்து (ஞானசேகரன்) பேசும் முன் அதை அவையில் தெரிவிக்க வேண்டும்.அதன் பிறகு தான் சபாநாயகர் அனுமதித்த பிறகே பேச வேண்டும்.

(ஒரு மணி நேரத்துக்கு முன்பே பேச அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக சபையில் அறிவிக்கப்பட்டது)

இதையடுத்து அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் எழுந்து நின்று கத்தினார். அவரை சபாநாயகர் அமரச் சொன்னார்.ஆனால், அவர் உட்கார மறுத்தார். இதையடுத்து பன்னீரும் எழுந்து நின்று பேச, அதிமுகவினர் அனைவரும்அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அன்பழகன்: ஒரு உறுப்பினரை (ஞானசேகரன்) பேச விடாமல் தடுப்பதே உரிமை மீறல் தான். தொடர்ந்துஅதிமுகவினர் இப்படி நின்று கொண்டு குறுக்கீடு செய்வது அவையின் கண்ணியத்துக்கு நல்லதல்ல. இவர்களைதடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம். (ஜெ மீதான) உரிமை மீறல் குறித்து பேச சபாநாயகர் அனுமதித்தபின்னரும் இவர்கள் குறுக்கீடு செய்வது சரியல்ல.

(அதிமுகவினர் மீண்டும் எழுந்து நின்று கூச்சல்)

ஆற்காடு: இந்த அரசு எதிர்க் கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பளித்தது, எதிர்க் கட்சி துணைத் தலைவர், கொறடாஆகியோருக்கு உடனுக்குடன் பேச வாய்ப்பு தந்து வருகிறது. ஆனால், போன ஆட்சியில் விளக்கம் கேட்டாலேஎதிர்க் கட்சியினரை வெளியேற்றி வந்தார்கள்.

(முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தம்பிதுரை, ஜெயராமன் ஆகியோர் எழுந்து நின்று பேச, அவர்களைசபாநாயகர் எச்சரித்தார்)

இந் நிலையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியது.இதையடுத்து மீண்டும் ஜெயலலிதா மீதான உரிமை மீறல் பிரச்சனை மீது விவாதம் தொடங்கியது.

செங்கோட்டையன் (அதிமுக): உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வரும் உறுப்பினர், தேவையான கருத்தைமட்டும் பேசாமல் தேவையில்லாததையும் பேசுகிறார்.

அமைச்சர் பொன்முடி: 2005ம் ஆண்டு சந்தானம் உரிமை மீறல் கொண்டு வந்தபோது திமுகவின் கொறாடாவாகஇருந்த புகழேந்தி, ஏன் என்று கேட்டதற்காக வெளியேற்றப்பட்டார். கடந்த ஆட்சியில் பேசக் கூட அனுமதிதரவில்லை.

(மீண்டும் அதிமுகவினர் கூச்சலிட்டதால் அவையில் அமளி நிலவியது)

சபாநாயகர் ஆவுடையப்பன்: எதிர்க் கட்சியினர் கட்டுப்பாடக இருக்க அவர்களது கட்சியின் துணைத் தலைவர்சொல்லித் தர வேண்டும்.

செங்கோட்டையன்: நாங்களும் இதே அவையில் பலமுறை உரிமை மீறல் கொண்டு வந்துள்ளோம். ஆனால்,அதற்கெல்லாம் அனுமதி தராத சபாநாயகர் இப்போது மட்டும் அனுமதி தந்துள்ளார்.

பொன்முடி: அதிமுக உறுப்பினர் பதர் சயீத் முதல்வர் மீதே உரிமை மீறல் கொண்டு வந்தார். அதற்குக் கூடஅனுமதி தந்துள்ளோம்.

ஆற்காடு: அவையை எதிர்த்து உயர் நீதிமன்றம் போவேன் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்த அவைக்குஎதிராக எந்த கோர்ட்டுக்கும் போக முடியாது. நீதிமன்றம் மூலம் வழக்கு போடுவேன் என்று சொன்னதன் மூலம்சபாநாயகரை மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது அவையை மீறியதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபாநாயகர்: அவையின் மரபு மற்றும் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தான் கடந்த மே மாதம் 26ம்தேதி, அன்று சட்டசபைக்கு இடையூராக செயல்பட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றஆணையிடப்பட்டது. இதே போல கடந்த ஆட்சியிலும் பலமுறை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதற்கானமுன் உதாரணம் உண்டு.

எனவே அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. இப்போது அவையில்எழுப்பப்பட்ட (ஜெவுக்கு எதிரான) உரிமை மீறல் பிரச்சனையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கிறேன்.

இதையடுத்து எழுந்த செங்கோட்டையன், சபாநாயகருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார். ஜெயலலிதா மீதானஉரிமைப் பிரச்சனையை உரிமைக் குழுவுக்கு அனுப்புவதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+