இலவச கலர் டிவி பெட்டிகள் அனுப்பும் பணி தொடங்கியது
சென்னை:
தமிழக அரசின் சார்பில் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள இலவச கலர் டிவி திட்டத்தின்மூலம் விநியோகிக்கப்படவுள்ள கலர் டிவி பெட்டிகளை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல்அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக 30,000 கலர் டிவி பெட்டிகள் வழங்கப்படவுள்ளன.இந்த டிவி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. 14 இஞ்ச்அளவிலான இந்தப் பெட்டிகளில் தமிழக அரசின் கோபுர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. டிவியுடன் சேர்த்துஆண்டனா, ரிமோட் கண்ட்ரோல் கருவி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
சேலத்திற்கு 453 டிவி பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 300 டிவிகளும்,தர்மபுரியில் 364 டிவிகளும், நாமக்கல்லில் 280 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 600 பேருக்கும்,கன்னியாகுமரியில் 193 பேருக்கும் டிவி வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 டிவிகள் வழங்கப்படுகின்றன. கோவையில் 600 பேரும், நீலகிரியில் 8000பேரும், விழுப்புரத்தில் 600 பேரும் இலவச டிவியைப் பெறவுள்ளனர்.
மதுரை மாவட்டத்திற்கு 200 டிவிகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 பேரும், திருச்சியில் 990 பேரும்,தஞ்சையில் 489 பேரும், கரூரில் 500 பேரும், நாகையில் 338 பேரும், திருவாரூரில் 540 பேரும்,புதுக்கோட்டையில் 600 பேரும் இலவச டிவியைப் பெறவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications