பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்குமத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த மசோதா இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதாவை எதிர்த்து இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இன்று டெல்லியில் போராட்டத்தைதுவங்குகின்றனர்.நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நீண்ட நேரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அனுமதி தரப்பட்டது.
27 சதவீத இட ஒதுக்கீட்டை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யாமல், உடனடியாக தாக்கல் செய்யவேண்டும் என திமுக, பாமக ஆகியவை கோரின.
ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு தேவையா என்று கம்யூனிஸ்ட்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்ததாகத் தெரிகிறது.
இறுதியில் கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை அளிப்பதில்லைஎன்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு திமுக, பாமக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தாலும் இறுதியின்அமைச்சரவையின் பெரும்பான்மை முடிவை ஒப்புக் கொண்டுவிட்டன.
மசேதாவை இந்தக் கூட்டத் தொடரிலேயே உடனடியாக கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைஏற்கப்பட்டுவிட்டது. இதையடுத்து வரும் 25ம் தேதி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் என்றுதெரிகிறது.
ஐஐஎம், ஐஐடி ஆகிய உயர் கல்வி மையங்கள் தவிர மத்திய அரசின் உதவி பெறும் அனைத்து கல்வி மையங்கள்தவிர டீம்டு யுனிவர்சிட்டிகளிலும் (நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்) இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும் எனமத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுவிட்டது. இதையடுத்து எந்தெந்த கல்வி நிலையங்களை இட ஒதுக்கீட்டின்கீழ் கொண்டு வருவது என்பது குறித்து ஆராய அர்ஜூன் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
27 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரே கட்டமாக அமலாக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைஏற்கப்படவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக இட ஒதுக்கீடு அமலாக்கப்படவுள்ளது.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து சமீபத்தில் போராட்டம் நடத்திய பிரிவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர். டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications