ஹேர் இன வெறியரா?-இன்சமாமுக்கு தடை வரும்
லண்டன்:
இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட போட்டியில், நடுவர்களுடன் மோதி,தொடர்ந்து விளையாட மறுத்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின்கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்குக்கு 4 டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் போட்டிகளில்விளையாட தடை விதிக்கப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நான்குடெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துடன் பாகிஸ்தான் விளையாடுகிறது.இதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வென்ற நிலையில், 4வது டெஸ்ட்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.இதில் 4வது நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பந்தைசேதப்படுத்தியதாக கூறிய நடுவர்கள் டேரைல் ஹேர் (ஆஸ்திரேலியா), மேற்குஇந்தியத் தீவுகளின் பில்லி டாக்ரோவ் ஆகியோர் புதிய பந்தை எடுக்க உத்தரவிட்டனர்.மேலும், இங்கிலாந்து அணிக்கு போனஸாக 5 ரன்களையும் வழங்கினர்.
பாகிஸ்தான் அணியினர் நடுவர் டேரைல் ஹேரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புதெரிவித்து, மைதானத்திலேயே ஹேரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் கோரிக்கையை ஏற்க ஹேர் மறுத்து விட்டார்.
இதையடுத்து தேனீர் இடைவேளைக்குப் பின்னர் விளையாட மறுத்து பாகிஸ்தான்அணியினர் போட்டியை புறக்கணித்தனர். கடைசி நாள் ஆட்டத்திலும் அவர்கள்விளையாட மறுத்து விட்டனர். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாகநடுவர்கள் அறிவித்தனர்.
இந் நிலையில் நடுவர் ஹேரின் செயல் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. அவர்ஒரு இனவெறியர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ரமீஸ்ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
இன்னொரு முன்னாள் கேப்டனான மொயின்கான், பாகிஸ்தான் அணியின் முடிவுசரியானதுதான் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்களான இயான் போத்தம், பாய்காட்ஆகியோர், ஹேர் ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்று தெரிந்தும் அவரை நடுவராகநியமித்தது தவறு என்று விமர்சித்துள்ளனர்.
ஹேர் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல.முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு வேண்டும்என்றே இரண்டுமுறை அவுட் கொடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர். முத்தையாமுரளீதரனுக்கு 7 முறை நோ-பால் தந்து அவரை நொந்து போக வைத்து சர்ச்சையில்சிக்கியவர். தற்போது பாகிஸ்தான் அணியினரிடம் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 129 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இப்படி ஒருசம்பவம் நடந்ததில்லை. அதாவது, எதிர் அணி விளையாட மறுத்ததால், மறு அணிவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் நடந்ததில்லை.
வழக்கமாக பந்தை சேதப்படுத்திய வீரருக்கு தண்டனை வழங்கப்படும், அபராதம்விதிக்கப்படும். ஆனால் இப்போட்டியில் யார் பந்தை சேதப்படுத்தியது என்பதைநடுவர்கள் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணி மீதேநடுவர்ஹேர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதான் பிரசசினையை பெரிதாக்கியுள்ளது.
நடுவர் ஹேர் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக பல தரப்பிலும் விமரசனங்ள்எழுந்துள்ளன. இதற்கிடையே இப்போட்டியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த 26கேமராவிலும், ஒரு கேமராவில் கூட பாகிஸ்தான் வீரர்கள் யாரும பந்தைசேதப்படுத்தும் காட்சி பதிவாகவிலலை என்றும் கூறப்படுவதால் ஹேர் மீதானவிமர்சனங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இன்சமாமுக்குத் தடை வரும்:
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியை விளையாட விடாமல் தடுத்து நிறுத்தியதற்காகஅதன் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மால்கம் ஸ்பீட்லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பந்தை சேதப்படுத்திய விவகாரம்தொடர்பாக போட்டித் தொடருக்கான ஐ.சி.சி. நடுவர் மதுகல்லே விசாரணை நடத்திவருகிறார்.
தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகக்ளுக்கு இன்சமாம் உல் ஹக்தான் பொறுப்பேற்கவேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் அத்தனை பேரும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால்,அந்த அணியின் கேப்டன் மீதுதான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இன்சமாக்கு 4 டெஸட் போட்டி அல்லது 8ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும். அடுத்து எந்தப் போட்டிமுதலில் நிடக்கிறதோ (டெஸ்ட் அல்லது ஒரு நாள்தொடர்) அதில் இந்தத் தடைஉத்தரவு அமல்படுத்தப்படும் என்றார் ஸ்பீட்.
இதற்கிடையே, நடுவர் ஹேர் பங்கேற்கும் போட்டிகளில் இனிமேல் ஆட மாட்டோம்என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷெகார்யார் கான் கூறியுள்ளார். நடுவர்ஹேர் பாகிஸ்தான் அணி மீது வெறுப்புடன் நடந்து கொண்டுள்ளார். எனவேஎதிர்காலத்தில் அவர் பணியாற்றும் போட்டிகளில் பாகிஸ்தான பங்கேற்காது.
நடுவர் ஹேரின் செயல்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சிக்கு புகார்அனுப்பியுள்ளது என்றார் கான்.
குரான் மீது சத்தியம் செய்த பாக்.வீரர்கள்:
பாகிஸ்தான் அணி கேப்டன் இன்சமாம் ஆட்டத்தைப் புறக்கணித்த முடிவுசரியானதுதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் ஊமர்கூறியுள்ளார்.
இன்சமாம் எடுத்த முடிவு தவறு என்று கூற முடியாது. பந்தை சேதப்படுத்தியதுதொடர்பான புகார் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று இன்சமாம் உள்ளிடடவீரர்களிடம் நான் கேட்டபோது,
திருக்குரான் மீது கை வைத்து அப்படி செய்யவில்லை என அனைத்து வீரர்களும்என்னிடம சத்தியம் செய்தனர்.
இதற்கு மேல் இன்சமாம் உள்ளிட்டவர்கள் மீது குறை கூறுவதை நான் ஏற்கமாட்டேன்.போடடி நடைபெறாமல் போனதற்காக டிக்கெட வாங்கி வந்து போட்டியை ரசிக்ககாத்திருந்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இதுதவிர்கக முடியாதது என்றார் ஊமர்.
ஒரு நாள் தொடரையும் பாக். புறக்கணிக்கும்:
இதற்கிடையே, என் மீதான குற்றச்சாட்டை ஐ.சி.சி. தவறு என்று கூறாவிட்டால்,பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரையும்புறக்கணித்து விட்டு நாடு திரும்பும் என இன்சமாம் எச்சரித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து இன்சமாம் கூறுகையில், எங்களை மோசடிக்காரர்கள் எனமுத்திரை குத்த முயற்சி நடக்கிறது. இதை தவறு என்று ஐ.சி.சி. நிரூபிக்க வேண்டும்.இது எனது ஒரு தனிப்பட்ட வீரர் மீதான நடவடிக்கையாக மட்டும் நாங்கள்கருதவில்லை. ஒட்டுமொத்த பாகிஸ்தான் மீதே தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதாகஅனைத்து வீரர்களும் உணர்கிறார்கள்.
என் மீதான மற்றும் எனது அணி மீதான களங்கத்தை ஐ.சிசி. துடைக்காவிட்டால்,நாங்கள் இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடசரில்பங்கேற்க இயலாது.
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.இந் நிலையில் இப்படி ஒரு மோசமானகுற்றச்சாட்டை சுமத்தியிருப்பதை ஏற்கமுடியாது. எனவே இந்த சர்ச்சையில்பாகிஸ்தான் அணிக்கே வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் இன்சமாம்.
பாகிஸ்தான் அணியின் செயலுக்கு அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரபும் ஆதரவுதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications