கருணாநிதி எச்சரிக்கை-வைகோ கைதாவாரா?
சென்னை:
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக யார் பேசினாலும் சட்டம் தன் கடமையைச்செய்யும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகரில் மதிமுக சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில்வைகோ மிகவும் ஆவேசமாக பேசினார். தென் தமிழ்நாட்டில் காஷ்மீரை உருவாக்கிவிட வேண்டாம், இலங்கைப் பிரச்சனையில் தலையிட இந்தியா என்ன பெரியநாட்டாமையா, தமிழக இளைஞர்கள் கொந்தளிப்பானவர்கள். அவர்களை ஆயுதம்ஏந்த விட்டு விடாதீர்கள் என்று பேசினார்.இந் நிலையில் இன்று சட்டசபை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்எழுந்து,
சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மீதுநடவடிககை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து ஆராய்ந்துஅணுக வேண்டும். பிரிவினைக்கு தூண்டுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானதுஎன்பதால் தான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார்.
நாட்டுப் பிரிவினை என்ற கோட்பாட்டை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன என்றுநான் நம்புகிறேன். எனவே வன்முறையைத் தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது. பிரிவினையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டம்தனது கடமையைச் செய்யும்.
ஈழத் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை மத்திய அரசு எடுக்கும் முடிவின்படி அறவழியில் நடப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் பேச்சைத் தொடர்ந்து வைகோவின் பேச்சு குறித்து விளக்கம் அளிக்கமதிமுக உறுப்பினர்கள் அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதிஅளிக்க மறுத்தார். இதையடுத்து மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
கைதாவாரா வைகோ?:
இந் நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேசியது தொடர்பாக வைகோ கைது செய்யப்படக்கூடும் என பரவிய தகவல்களால் அவரது சென்னைவீட்டு முன் மதிமுகவினர் குவிந்துள்ளனர்.
வைகோ மீது தி.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எந்நேரமும் அவர் கைது செய்யப்படக்கூடும் என்றும் தகவல்பரவியது.
இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டு முன்பு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், டிவி குழுவினர் குவிந்தனர். மதிமுகதொண்டரக்ளும் ஏராளமான அளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
வைகோ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 11ம் தேதிவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோவும் அவரது கட்சியினர் 8 பேரும் பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவால் கைதுசெய்யப்பட்டனர்.
சுமார் 576 நாட்கள் சிறை வாசம் அனுபவித்த வைகோவை வெளியில் கொண்டு வந்ததில் கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். இந் நிலையில் தற்போதையதிமுக அரசே வைகோவை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.
290 அகதிகள் வருகை:
இதற்கிடையே இலங்கையிலிருந்து நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரைமொத்தம் 290 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்தின் கெடுபிடி அதிகரித்து வருவதாகவும், தமிழர்களைபடுகொலை செய்வதும், பெண்களை கற்பழிப்பதாகவும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
பேசாலை பகுதியில் 5 தமிழ் மீனவர்களை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்கூறினர்.
வைகோவுக்கு கருணாநிதி பதில்
இதற்கிடையே வைகோ இலங்கைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டது தொடர்பாகநான் கூறிய சேதியில் தவறில்லை என்றுகருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் பேசுகையில்,
வைகோ இலங்கைக்கு சென்றது தொடர்பாக சட்டசபையில் இரு நாட்களுக்கு முன்எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு வைகோ பத்திரிக்கை வாயிலாக பதில் கூறி இருக்கிறார்.குறிப்பிட்ட தேதியில் அந்த சம்பவம் நடைபெறவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் விடுதலைப்புலிகளுக்கு தார்மீக ஆதரவு கொடுத்து பேசுவது தவறு இல்லை என்று நீதிமன்றம்கூறியுள்ளது. அதற்காக சட்டம் ஒழங்கு சீர்குலைக்க சிறிதும் அனுமதிக்க முடியாதுவிடுதலைப் புலிகளுக்கு நிதி உதவியோ, ஆயுத உதவியோ செய்யாமல் தார்மீகஆதரவு கொடுப்பது தவறு அல்ல.
ஆயுதம் தாங்கி போராடுவதாகவும், நாட்டை பிரிப்பதாகவும் யாராவது பேசிஇருந்தால் அதை நாங்கள் ஒத்து கொள்ளமாட்டோம். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுபேசி இருக்கலாம். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
வைகோ அன்றைய சூழ்நிலையில் கடல் மார்க்கமாக இலங்கை சென்று திரும்பிஇருக்கிறார் என்றார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், திமுக ஆட்சியின் 100வது நாள்சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிலர் மனதளவில்வாழ்த்துகிறார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 100 நாள் ஆட்சிக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.
எதிர்ப்பும் அரவணைப்பும் இருந்தால் தான் எதுவும் இயங்க முடியும். உங்கள்அனைவரின் அன்பால் கருணையால், ஆதரவால் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த அவையில் நான் பேசிய கருத்து குறித்து அருமை நண்பர்கண்ணப்பன் கூறிப்பிட்டார்.
அவருடைய கட்சி தலைவர் குறிப்பிட்ட தேதியில் அந்த சம்பவம் நடைபெறவில்லைஎன கூறியுள்ளார் என குறிப்பிட்டதாக கூறி இருக்கிறார்.
ஒரு வேளை வயதான காரணத்தால் நான் சொன்ன தேதியில் தவறு ஏற்பட்டுஇருக்கலாம். ஆனால், சேதியில் தவறில்லை. தேதியும் சரியானது தான். கோபால்சாமி(வைகோ) அன்றைய தினம் திடீரென்று இலங்கைக்கு கடல் வழியாக மர்மப் பயணம்ஒன்றை மேற்கொண்டார்.
யாருக்கும் சொல்லாமல் அவர் மேற்கொண்ட பயணம் அவரை பொறுத்தவரை நல்லஎண்ணத்தோடு, நல்ல குறிக்கோளோடு செய்யப்பட்ட பயணம் என்றாலும் அவர்சொன்ன கருத்து என்னை புண்படுத்துகிறது.
1989ம் ஆண்டு அவர் வன்னிகாட்டுக்கு என்னிடம் சொல்லாமல் பயணம்மேற்கொண்டார். பிப்ரவரி 5ம் தேதி அவர் எழுதி கொடுத்த கடிதம் 24ம் தேதி எனக்குகிடைத்தது. கலைஞருக்கு எழுதிய கடிதம் சில நாள் தாமதமாக கொடுக்க வேண்டும்என்று அவரே சொன்னதாக செய்திகள் அப்போதே வெளியாகி உள்ளன.
ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஈழப்போர்நடந்தபோதே பிரபாகரனை சந்திக்க சென்றதாகவும் அந்த கால கட்டத்தில் நான்தெரியப்படுத்த விரும்பியதை பிரபாகரனிடம் சொல்வதற்காவும் அவர் போனதாககுறிப்பிட்டுள்ளார்.
இதில் இருந்தே ஜமுக்காளத்தில் வடிகட்டப்பட்டது எது என்பதை தெரிந்துகொள்ளலாம். எந்த ஒரு கால கட்டத்திலும் ஈழத்தில் சகோதர யுத்தம் கூடாது என்பதைநான் வற்புறுத்தி வருகிறேன். இலங்கை தமிழர் பிரச்சனையிலும் நல்ல தீர்வு ஏற்படவேண்டும்.
அது என்னால் தான் ஏற்பட்டது என்று இன்னொருவரை கழுத்தை பிடித்து தள்ளுவதாகஇருக்க கூடாது. வைகோ இலங்கை சென்றது ஆர்வம் காரணமாகத் தான். இப்போதுஇலங்கையில் தமிழர்கள், சிங்கள வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள்.
தமிழர்களை யார் காப்பாற்றுவது என்று சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் வாழ்வு நலம் பெற வேண்டியது அவசியம். இங்கு நான் ஆற்றிய உரைக்குபிறகு வைகோ பேசினாலும், யார் பேசினாலும் அதை நான் பொருட்படுத்த போவதுஇல்லை. எத்தனை அடி அடித்தாலும், அத்தனை வலியும் எனக்கே வரட்டும்.
ஈழத்தமிழருக்கு வேதனை தருவதாக இருக்க வேண்டாம் என்றார்கருணாநிதி.
வந்தார் துரைமுருகன்:
இதற்கிடையே சுகவீனம் காரணமாக சட்டசபைக்கு வராமல் இருந்தபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பூரண நலம் பெற்று சபைக்குத்திரும்பினார்.
அவர் சபைக்கு வந்துபோது திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத்தட்டி துரைமுருகனை வரவேற்றனர்.கருணாநிதியும் தனது பேச்சின்போது,பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமருகன் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் வகையில்உடல் நலத்துடன் இந்த அவைக்கு வந்திருக்கிறார். நமது வாழ்த்தெல்லாம் அவருக்குமருந்தாக அமைந்திருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications