அனைத்து ஜாதி அர்ச்சகர்-மசோதாவில் திருத்தம்
சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் சட்ட மசோதாவுக்குஉச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதால, அந்த சட்ட மசோதாவில்திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில், நிறைவேற்றப்பட்டது.
தமிழக கோவில்களில அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வகை செய்யும் சட்டமசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்த்து சில சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைவிசாரித்த உச்சநீதிமன்றம் சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து மசோதாவில் இடம் பெற்றுள்ள 8வது பிரிவை நீக்க தமிழக அரசுமுடிவு செய்தது. இதுதொடர்பாகமுதல்வர் கருணாநிதி திருத்த மசோதாவைத் தாக்கல்செய்து பேசுகையில்,
நீதிக்குத் தலைவணங்கு என்பதற்கேற்ப, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வகைசெய்யும் மசோதாவில் இடம் பெற்றுள்ள 8வது பிரிவை நீக்கி விட அரசே முடிவுசெய்துள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து 8வது பிரிவு நீக்கப்பட்ட சட்ட திருத்த மசோதா ஒருமனதாகசட்டசபையில் நிறைவேற்றப்படடது.
அனைத்து ஜாதியினரும் இந்துக் கோவில்களில் அர்ச்சகர் ஆக வழக்கமோ அல்லதுவழக்கோ எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
மசோதாவின் இந்தப் பிரிவுக்குத் தான் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த மசோதா மீது கருணாநிதி பேசுகையில்,
ஜாதி முறை என்ற பிறவி இழிவைப் போக்கவும் தீண்டாமையை அடியோடுஒழிக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் நாம் முயற்சி செய்யும்போதெல்லாம் ஒருபிரிவினர் முட்டுக் கட்டை போடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், அதையெல்லாம் உடைத்து எறிந்து தான் நாம் நமது லட்சியங்களை நிலைநாட்டியுள்ளோம்.
வேதங்களே பிறப்பால் ஜாதி எதிவும் இல்லை என்றும் அனைவரும் சமம் என்றுசொல்லிவிட்ட பிறகு வேதங்களின் பெயரால் சாதிப் பிரிவுகள் பேசப்படுவதும்,அர்ச்சகர் பணியை வேறு ஜாதியினர் செய்யக் கூடாது என்று தடுப்பதும், இந்தகொடுமைகளுக்கு சட்ட அங்கீகாரம் பெறுவதும் போன்ற கொடுமைகள் நடந்துகொண்டு தான் உள்ளன.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சக் ஆவதற்கு இடர் ஏற்படுமானால் அதைக் களைந்துநமது லட்சியப் பயணம் தொடரும். அண்ணல் அம்பேத்கரின் கனவுகள் நிறைவேறதொடர்ந்து உழைப்போம் என்றார் கருணாநிதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications