இலங்கை விவகாரம்: இந்தியா என்ன நாட்டாமையா?- வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிங்களர்களால் தாக்கப்படும், கொல்லப்படும், கற்பழிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்குஆதரவாக டெல்லி மற்றும் சென்னையில் எனது தலைமையில் போராட்டம்நடைபெறும் என மதிகபொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

செனன்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில் ஈழத்தமிழர்பாதுகாப்பு பொதுக் கூட்டம் நடந்தது. வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாறறினார்.மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய வைகோ, ஈழத்தில் இறுதிப் போர் தொடங்கியுளளது.வெற்றி தமிழர்களுக்குத்தான் என்றார்.

வைகோவின பேச்சு விவரம்:

செஞ்சோலை முகாமில் 73 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாரகள.இத்தனை காலம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது திறககாத இதயக் கதவுகள்இப்போது திறந்திருக்கின்றன.

எது பயங்கரவாதம்? இப்போது இதை பேசித் தீர்க்க வேண்டிய கட்டாயம்வந்திருக்கின்றது. நாஙகள் பயங்கரவாதிகள்அல்ல. ஆனால் எது பயங்கரவாதம்என்பதை அறிய விரும்புகிறேன். அரேச பயஙகரவாதத்தில் ஈடுபடும்போது அதைஎதிர்ப்பது எப்படி பயங்கரவாதம் ஆகும்?

எந்த வகையில் சிங்களத்துக்காரனோடு, தமிழன் ஒன்றாக வாழ முடியும்? இலங்கைதுண்டாடப்படக் கூடாது என்று கூறும் இந்திய அரசே, அந்த நாட்டில் எப்படி அதிகரப்பகிர்வு அமைய வேண்டும் என்று கூற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.? நீங்கள்என்ன பெரிய நாட்டாமையா?

இலங்கையின் உள் விவாகரஙகளில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்தியாவின் அதிகாரப் பகிர்வை அங்கு ஏற்றுக் கொள்வார்களா.?எத்தனை முறை தான் ஏமாற்ற நினைப்பீர்கள்? நீங்கள் என்ன யோசனை சொலவது.இந்த யோசனையை மதிமுக ஏற்காது. தமிழ் ஈழம் ஒன்றே இறுதித் தீர்வு.

நேற்றும் வைகோ இதைத்தான் பேசினான். இன்றும் இதைத்தான் பேசுகிறான்,நாளையும் இதைத்தான் பேசுவான். 2 வருடம் என்ன 10 வருடம் சிறையில்போட்டாலும் இதைத்தான் பேசுவான். இது வெறும் பேச்சல்ல, லட்சியங்களுக்காகப்போராடும் ஒரு போராளியின் வார்த்தை.

ஈழத்தில் உள்ள 99 சதவீத மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்கள். அப்புறம் ஏன்சமாதானம் பேசுகிறீர்கள். தமிழர்கள் பாதிக்கப்படடு விடக் கூடாது என்பதறகாகவிடுதலைப் புலிகள் மிகவும் எச்சரிக்கையாக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் என் மீது சில பழிச் சொற்களை பேசியுள்ளார். என்னை கொலைகாரன்என்றதை விட, அதை விட கொடுமை, விடுதலைப் புலிகள் கொலை செய்யப்போகிறார்கள் என்று என் மீது பழியைத் தூக்கிப் போட்டீர்களே. எதற்காக?

என்னை திமுகவிலிருந்து நீக்குவதற்கு, எவ்வளவு ஒதுக்கினாலும இவன் போகமாட்டான், இந்த கட்சியில் இருக்கக் கூடாது என்று நீங்கள் வகுத்த திடடம், உங்கள்குடும்பத்தில் வகுத்த திட்டம், அதன் விளைவுதான் 93 சம்பவம், தண்டபாணிதீக்குளிப்பு. சட்டமன்றத்தில் என்ன திடீர் தம்பி பாசம், என்ன பாசாங்கு.வெளிப்படையாக வாருங்கள்.

நான் பயங்கரவாத அமைப்போடு தொடர்புஉளளவன் என்று ஒரு குற்றச்சாட்டு. நான்என்ன பின்லேடனோடு தொடர்ப வைத்திருக்கிறேனா, ஹிஸ்புல்லாவோடு தொடர்புவைத்திருக்கிறேனா? விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். இன்றும்சொல்கிறேன், நாளையும் சொல்வேன். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசுஉதவியுள்ளது. எம்.ஜி.ஆர். உதவிகள் செய்திருக்கிறார்.

இந்திய அரசு நிறுத்தியபோதிலும், தொடர்ந்து எம்.ஜி.ஆர். செய்துள்ளார்.சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி, நான் எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியைபடிக்காமல் விட்டுளளார்.

அதில் நான் எழுதியுள்ளேன். ஒரு வேளை நான் ராணுவத்திடம் பிடிபட நேர்ந்தால்,என்னால் கழகத்திற்கோ, கழக அரசுக்கோ எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டு விடாமல்என்னையே நான் பலியிட்டுக் கொள்வேன் என்று அதில் எழுதியிருந்தேன். இதைபடிக்காமல் விட்டு விட்டார். ஏன் என்மீது பச்சாதாபம் எழுந்துவிடும்என்பதற்காகத்தான்.

நான் 5ம் தேதி கடிதம் எழுதினேன். நீஙகள் 24ம் தேதி வந்ததாக கூறினீர்கள். 6ம் தேதிஇரவு நான் கடல் வழியாக செல்கிறபோது, 7ம் தேதி காலையில் முதல்வரிடம்கொடுதது விடுமபடி எனது நண்பர் குட்டியிடம் கொடுத்த அனுப்பினேன். அவரும்சென்று கொடுத்தார்.

கடிதத்தை 7ம் தேதி காலை 6.45 மணிக்கு கொடுத்தாச்சு.

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்துங்கள் என்று நீங்கள் பிரதமருக்கு 8கடிதங்கள் போட்டீர்கள். ஒன்றுக்குக் கூட பதில் வரவில்லை.

இந்தியாவின் தூதராக சென்ற ஜானியைக்கூட இந்திய அமைதிகாக்கும்படையினர்சுட்டுக்கொன்றனர். பிரச்சினை திசை திரும்ப நானா காரணம்?

தென் சென்னை மாவட்ட செயலாளரை பிடித்து கைது செய்துள்ளனர். அவர்பேசியதில் தப்பே இல்லை. உங்களுக்கு என்னைகைதுசெய்ய வேண்டுமா?தாராளமாக கைது செய்து உள்ளே போடுங்கள். அதை விடுத்து எனதுகட்சிக்காரர்களைகைது செய்யாதீர்கள்.

இலங்கைக்கு எந்தவித ராணுவ உதவியையும் மத்திய அரசு செய்யக் கூடாது,இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்,இலங்கை அரசு மேறகொண்டு வரும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும்,

இலங்கையிலிருந்து அகதிளாக வரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்பது உளளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்30ம் தேதி எனதுதலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

செப்டம்பர் 1ம்தேதி செனனையில் போராட்டம் நடைபெறும் எனறார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+