இலங்கை பிரச்சனையில் கருணாநிதி டபுள் ஆக்ட்: வைகோ
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில்முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போட்டுவருகிறார். அவர் மீது நான் சொன்ன குற்றச் சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள்என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தர்மபுரியில் நடந்த மதிமுக ஊழியர்கள் கூட்டத்தில் வைகோ பேசுகையில், நான்கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை வேண்டும் என்றே வெளியில்சொல்லாமல் விட்டு விட்டார் கருணாநிதி.அவற்றை வெளியே சொன்னால் என் மீது அனுதாபம் ஏற்பட்டு விடுமே என்றபயம்தான் இதற்குக் காரணம். இந்த விவகாரம் நடந்து 17 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட அத்தனை உண்மைகளையும் என்னால் இப்போது கூட நிரூபிக்க முடியும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். அதைநிறுத்துவதுற்குப் பதிலாக என் மீது அவதூறான புகார்களைக் கூறி வருவதுதவறானதாகும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications