ஜெயலலிதா மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!
சென்னை:
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செயதுள்ள மறு ஆய்வு மனுவை விசாரிக்கசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் மறுத்துவிட்டார். இதையடுத்துஇந்த மனுக்களை வேறு ஒரு நீதிபதி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசி என்டர்பிரைசசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஜெயலலிதாவும், சசிகலாவும்கடந்த 1991-92, 92-93 ஆகிய ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல்செய்யாததால், 1993ம் ஆண்டுக்குரிய கணக்கை இருவரும் தனித்தனியாக தாக்கல்செய்யாததாலும், வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
இருவரும் 25ம் தேதிக்குள் நீதிமன்றத்திற்குள் (இன்று) ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிட்டது. மேலும் இன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆனால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும்வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனு
நேற்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்பு விசாரணக்கு வந்தன.
அப்போது நீதிபதி ரவிராஜ பாண்டியன், இந்த மனுக்களை நான் விசாரிக்கவிரும்பவில்லை. எனவே இதை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியைகேட்டுக் கொள்வேன் என்றார்.
இதைத் தொடர்ந்து வேறு ஒரு நீதிபதி இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.
இதன் தீர்ப்பைப் பொறுத்தே எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இன்று ஆஜராவார்களாஎன்பது தெரிய வரும்.
ஜெ., சசி ஆஜராகவில்லை:
இந் நிலையில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில், இன்று ஜெ, சசி மீதான வருமான வரி விசாரணைக்கு வந்தபோது,அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜு, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதால் ஆவணங்கள் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகஅறிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications