மதுரை: மேலும் ஒரு போலீஸ் குதிரை சாவு-5 குதிரைகள் கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காவல் துறை குதிரைப் படையில் ஏற்கனவே 3 குதிரைகள் மர்மமானமுறையில் இறந்துள்ள நிலையில் மேலும் ஒரு குதிரை இறந்துள்ளது. பாக்கி உள்ள 5குதிரைகளும் நோய் வாய்ப்பட்டுள்ளதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை காவல் துறையில் குதிரைப்படை உள்ளது. முக்கிய நேரங்களில் இந்தகுதிரைகள் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

குதிரைகளை பராமரிப்பதற்கு முன்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போதுஅவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு காவல் நிலையப் பணிகளுக்குஅனுப்பப்பட்டு விட்டனர். மிகச் சிலரே பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 குதிரைகள் மர்மமானமுறையில்இறந்தன. அடுத்தடுத்து 3 குதிரைகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்துஇறந்த குதிரைகளின் ரத்தம் மற்றும உடலின் சில பகுதிகள் பரி சோதனைக்காகஎடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு குதிரை பரிதாபமாக இறந்தது. இந்தக் குதிரைஇறந்ததற்கும் காரணம் தெரியவில்லை. மேலும், தற்போது மீதம் உள்ள 5 போலீஸ்குதிரைகளும் நோய் வாய்ப்பட்டுள்ளன. இவையும் அடுத்தடுத்து இறந்து விடுமோஎன்ற அச்சம் குதிரைப் படைக் காவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு போலீஸ் நாய்கள் சிலவும் கூட நோய் வாய்ப்பட்டுள்ளதால் மதுரை காவல்துறையிலும், பொதுமக்கள் மத்தியலும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+