இடஒதுக்கீடு: ராமதாஸ் விமர்சனம்-காங். அதிருப்தி
சென்னை:
27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இடஒதுக்கீடுதொடர்பான ஆய்வுக் குழுத்தலைவர் வீரப்ப மொய்லி ஆகியோரை பாமக நிறுவனர்ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது துரதிர்ஷ்ட வசமானது, அதிருப்தி தரும்வகையில் இது அமைந்துள்ளதாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்கூறியுள்ளார்.
இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி ஆகியோர் துரோகம்செய்து விட்டனர். வீரப்ப மொய்லி தமிழகத்திற்கு வந்தால் அவருக்கு கருப்புக் கொடிகாட்டி விரட்டுவோம் என ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் மூத்ததலைவர்கள் யாரும் கருத்து சொல்லவில்லை.மாநில காங்கிரஸ் தலைவரும், ராமதாஸின் சம்பந்தியுமான கிருஷ்ணசாமி இதுகுறித்துஎந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். ராமதாஸ் பேச்சுக்குகாங்கிரஸ் மேலிடம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கோரி கட்சிமேலிடத்திற்கு கடிதங்களும் அனுப்பப்பட்டன. முன்னணித் தலைவர்கள் இதுவரைவாயே திறக்காமல் இருந்த நிலையில் தற்போது சட்டசபை காங்கிரஸ் தலைவர்சுதர்சனம், ராமதாஸ் பேச்சு குறிதத் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியும்,அதன்முன்னணித் தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்வகையில் ராமதாஸ் பேசியுள்ளார். இது வருத்தம் தருகிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் சமூக விடுதலைக்காகவும்,சமூக நீதிக்காவும் தொடர்ந்து, தொய்வில்லாமல் போராடிய வரலாறு அகில இந்தியஅளவில் காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு.
இதற்காக அரசியல் சட்டததை முதன்முதலில் திருத்தியவர் நேரு. மண்டல் கமிஷனைநியமித்தது உள்பட அதன் அறிக்கையை வெளியிடவும் முழு முதல் காரணமாகஇருந்தது காங்கிரஸ் தான் என்பதை ராமதாஸுக்கு நினைவூட்டுகிறேன்.
முன்பு காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும், இப்போது சோனியாவும்,மன்மோகன்சிங்கும் அகில இந்திய அளவில் மிகப் பெரிய சமூக நீதிப்போராளிகளாகவே தங்களது தனி வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபையிலும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்துதீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, சட்டபேரவை காங்கிரஸ் கட்சி வைத்தகோரிக்கை தான் மிகப் பெரிய காரணம் என்பதையும் ராமதாஸுக்கு சுட்டிக் காட்டவிரும்புகிறோம்.
இந்த மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படைலட்சியங்களில் ஒன்று. அதனைப் பெற்றுத் தரும் போராட்டத்தில், காங்கிரஸும்,அதன் தலைவர்களும் ஒரு நாளும் பின் வாங்க மாட்டார்கள்.
ஒரே கருத்தோடு இருப்பவர்களின் மத்தியில் ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்தாமல்,ஒருவரின் பிரச்சினைகளை மற்றவர் புரிந்துகொண்டு இணக்கமாக செயல்பட்டால்,மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் கருணாநிதிதலைமையில் செயல்படும் திமுக அரசும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கும்என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார் சுதர்சனம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications