சென்னை-பெங்களூர் இடையே விரைவில் புல்லட் ரயில்!
பெங்களூர்:
சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே அதிவேக புல்லட் ரயிலைஅறிமுகப்படுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சென்னை-பெங்களூர் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரமாககுறையும்.
நாட்டின் மூன்றுமுக்கிய வழித் தடங்களில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தமத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செயதுள்ளது. சென்னை-பெங்களூர்,மும்பை-புனே, டெல்லி-ஜெய்ப்பூர் ஆகியவையே அந்தமுக்கிய நகரங்கள்.இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளும், பேச்சுவார்ததைகளும்தொடங்கியுள்ளன. திட்ட அமலாக்கத்திற்கு சிறிது நாட்கள் பிடிககும் என்றாலும் கூடஇந்தக் கனவு விரைவில் நனவாகும் நாள் தொலைவில் இல்லை என்று ரயில்வேவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டப்படி இந்த நகரங்களுக்கிடையிலான ரயில்பாதையில் தண்டவாளங்கள்காந்த மயமாக்கப்படும். இதற்கு பெரும் பொருட் செலவாகும். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.200 முதல் 300 கோடி வரை செலவு பிடிக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக தற்போது உள்ள தண்டவாளங்களை எடுத்துவிட்டு காந்த தன்மை கொண்ட புதிய தண்டவாளங்கள் போடப்படும்.
புல்லட் ரயில்கள் மணிக்கு குறைந்தது 250 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 400கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை. இதன்படி சென்னை, பெங்களூர்இடையிலான பயண நேரம் 1 மணிநேரமாக குறையும். விமான பயணத்தை விடசற்றே குறைந்த அளவில் பயணக் கட்டணம் இருக்கும் என்பதால் விமானபயணிகளையும் இந்தத் திட்டம் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications