இலவச டிவிக்கு சலுகை கட்டணத்தில் கேபிள் இணைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு வழங்கும் இலவச தொலைக்காட்சிக்கு, சலுகை கட்டணத்தில் கேபிள்இணைப்பு வழங்குமாறு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இலவச டிவி திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதிஅண்ணா பிறந்த நாள் முதல் இது அமலுக்கு வரவுள்ளது. இலவச டிவியுடன் கேபிள்இணைப்பையும் இலவசமாக தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்வலியுறுத்திய தால் கேபிள் இணைப்பும் இலவசமாக தரப்படும் எனஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சலுகை கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும் எனதெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு அறிவுரைஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, இலவச தொலைக்காட்சிகள் வழங்கப்படும்சமத்துவபுர வீடுகளுக்கு சலுகைக் கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்குமாறுகேபிள் டிவி ஆபரேட்டர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குஅரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் சாட்டர்ஜி கூறுகையில்,வழக்கமாக வசூலிக்கப்படும் கேபிள் கட்டணத்தை விட குறைவான தொகையைசமத்துவபுர பயனாளிகளிடம் வசூலிக்குமாறு கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவுகொடுக்கப்பட்டுள்ளது என்றார் சாட்டர்ஜி.

தற்போது சென்னை நகரில் செட்டாப் பாக்ஸ் முறை அமலில் உள்ளதால் நகரிலும்,புறநகர்களிலும் அதிகபட்சம் 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால்தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைந்தது ரூ.150 முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரைவசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, செப்டம்பர் 15ம் தேதி அமலுக்கு வரும் இத்திட்டத்தை சென்னைஅருகே படப்பை பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.

படப்பை சமத்துவ புரத்தில் இத்திட்டத்தை தான் தொடங்கி வைக்கவுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார். அடுத்த நாள் தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இலவச கலர் டிவியை வழங்குவர் என்றும் முதல்வர்தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+