நாளை முதல் வேளாங்கண்ணி ஆலய திருவிழா
வேளாங்கண்ணி:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருக் கொடியைஏற்றுவார். பின்னர் தமிழில் திருப்பலி நடக்கிறது.
செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை, மாலைபல்வேறு நேரங்களில் தமிழ் தவிர தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, இந்திபோன்ற மொழிகளில் திருப்பலி நடக்கிறது.
செப்டம்பர் 8ம் தேதி ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் பெருவிழா நடக்கிறது.
விழாவையொட்டி 27 முதல் 12ம் தேதி வரை மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,கும்பகோணம், காரைக்குடி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்இயக்கப்படுகின்றன.
இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்வேளாங்கண்ணியில் குவியவுள்ளனர்.












Click it and Unblock the Notifications