திரிகோணமலையில் மீண்டும் வெடிக்கிறது மோதல்
கொழும்பு:
திரிகோணமலை துறைமுகத்தை ஒட்டிய சம்பூர் கிராமப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இலங்கை ராணுவம்முன்னேறி வருகிறது. ஆனால், கடும் பதிலடி தாக்குதலை ராணுவம் சந்திக்கப் போவதாக புலிகள்அறிவித்துள்ளனர்.
யாழ்பாணம், திரிகோணமலையில் சற்று அமைதி நிலவி வந்தது. ஆனால், எந்த நேரமும் மீண்டும் மோதல்தொடங்கலாம் என்பதால் அங்கு பெரும் பீதியும் அச்சமும் நிலவுகிறது.இந் நிலையில் திரிகோணமலை துறைமுகத்தை புலிகளிடம் இருந்து காக்கும் வகையில் அதையொட்டியுள்ளசம்பூர் உள்ளிட்ட சில கிராமப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ராணுவம் முடிவு செய்துள்ளது.இங்கு புலிகள் நிலைகொண்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளை நோக்கி ராணுவம் முன்னேற ஆரம்பித்துள்ளது. சம்பூரில் செல்வநகர் பகுதியில் சிறியதாக்குதலை ஆரம்பித்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
ஆனால், சம்பூரை இழக்க மாட்டோம். அதை எங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருப்போம். அதைக்காக்க கடும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என புலிகள் கூறியுள்ளனர்.
ராணுவத்தினரை தடுக்க புலிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
போரை தவிர்க்க விரும்பும் ராணுவத்தினர்:
இலங்கையில் நடக்கும் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. இப்போது நடந்து வரும் மோதல்தேவையில்லாதது என்று பெரும்பாலான இலங்கை ராணுவத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திரிகோணமலையில் முகாமிட்டுள்ள ராணுவ அதிகாரிகள், ராணுவத்தினரிடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனநிருபர்கள் பேசுகையில்,
இது ஒரு கொரில்லா யுத்தம். இதில் யாருக்கும் வெற்றி சாத்தியமில்லை. புலிகள் காட்டுக்குள் இருக்கிறார்கள்.அங்கிருந்தபடி தாக்குகிறார்கள். இது வழக்கமான போர் என்றால் தீர்வு கிடைக்கும். இதில் தீர்வே சாத்தியமில்லை.
நாங்கள் அமைதி ஒப்பந்தத்தையும் மக்களையும் காப்பாற்றவே புலிகளை திருப்பித் தாக்கி வருகிறோம் என்றார்ஒரு ராணுவ அதிகாரி.
இன்னொரு ராணுவ அதிகாரி கூறுகையில், இந்த மோதல் எங்களுக்குப் பிடிக்கவில்லை, போரை நாங்கள்விரும்பவில்லை. அமைதியே எல்லோருக்கும் நல்லது. எனது படையினர் கொல்லப்படுவதை ஏற்க முடியவில்லை.நான் புத்தர் சிலையை உடன் எடுத்து வந்திருக்கிறேன். யாரையும் கொல்ல எனக்குப் பிடிக்கவில்லை.
நான் சிங்களர்களுக்காக மட்டுமல்ல, தமிழர்களுக்காகவும் சேர்த்துத் தான் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளேன்.போர் மூலம் தீர்வு கிடைக்காது. பேச்சுவார்த்தை மூலமே அமைதி சாத்தியமாகும் என்றார்.
இவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது.
அதே நேரத்தில் சில அதிகாரிகளும் வீரர்களும் போர் ஒன்றே பிரச்சனையைத் தீர்க்கும் என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கொழும்பில் விமான நிலையம் அருகே ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்துகொழும்பிலும் புலிகளின் தாக்குதல் நடக்கும் என்ற அச்சம் பரவியுள்ளது. இதனால் வீடு, வீடாக பல இடங்களில்சோதனைகள் நடத்தி வருகிறது ராணுவம். வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பில் வசிக்கும் தமிழர்களை கண்காணிப்பதோடு, அவர்களது தொலைபேசிகளையும் ராணுவம் ஒட்டுகேட்டு வருகிறது.
இதற்கிடையே நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பல் செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் யாழ்பாணத்தில்இருந்து வெளிநாட்டினரும், தொண்டு நிறுவனத்தினரும் வெளியேறிவிட்டனர்.
இந் நிலையில் இந்தியா டுடேவுக்கு அதிபர் ராஜபக்ஷே கொடுத்துள்ள பேட்டியில்,
புலிகளுடன் போரிட விரும்பவில்லை. அவர்கள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு பேச்சு நடத்த முன் வரவேண்டும். அதே நேரத்தில் நிர்பந்தத்துக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.
இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவி எங்களுக்குத் தேவை. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்குஎங்கள் முதல் தேர்வு இந்தியா தான். அதன் பிறகே பிற நாடுகளின் உதவியை நாடுவோம். தன் நாட்டின்அரசியல் சூழல்களுக்கு ஏற்ப இந்தியா அனுசரித்துப் போகிறது என்பதை அறிவேன்.
ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா என்ன முயற்சிகள் எடுக்கிறது என்பதை உலக நாடுகள் ஆவலுடன்எதிர்பார்க்கின்றன. கடல் வழியாக ஆயுதங்கள் யாழ்பாணம், திரிகோணமலைக்கு கடப்படுகின்றன. இதை தடுக்கஇந்தியா தான் உதவ வேண்டும்.
இலங்கைத் தமிழர்களில் ஒரு பிரிவினர் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளனர்.
நாங்கள் பாகிஸ்தானிடம் இருந்து மட்டும் ஆயுதங்கள் வாங்கவில்லை. இஸரேல், சீனா, ரஷ்யா, உக்ரைனில்இருந்தும் வாங்குகிறோம். சில நேரம் இந்தியாவிடமும் வாங்கியிருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே இலங்கை விவகாரத்தில் ஆயுத உதவி என்ற பெயரில் பாகிஸ்தான் தலையிடுவதை தடுக்க அதில்இந்தியா தலையிட வேண்டும் என ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications