கேரளத்தின் தெளிவு: பழ.நெடுமாறன் தாக்கு
கோவை:
கோவை உள்ளிட்ட மலையாளிகள் வசிக்கும் பகுதிகளில் தமிழை முதன்மை மொழியாக கற்பிக்க விலக்குஅளிக்குமாறு கேரள அரசு கோரியுள்ளதற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கண்னமதெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அமைதி நிலவ இந்தியா உதவ வேண்டும் என்கிறார் ராஜபக்ஷே.இதே போலத்தான் 1983ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் அமைதி நிலவ உதவுமாறுஜெயவர்த்தனே கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தூதராக பார்த்தசாரதியை இலங்கைக்குஅனுப்பினார் இந்திரா காந்தி.
இதையடுத்து சிங்கரளர், தமிழர் இடையே வட்டமேஜை மாநாடு நடத்தப்பட்டு அனெக்ஸர் சி என்ற திட்டம்உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஜெயவர்த்தனே முன் வரவில்லை. இந் நிலையில்இந்திரா காந்தியும் படுகொலையாகிவிட சமரசப் பேச்சு முற்றிலும் சீர்குலைந்து போனது. அப்போது இந்தியத்தூதர் பார்த்தசாரதி இலங்கை வந்தால் அவரிடம் பேச மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்தது.
அவர்களுக்கு நெருக்கடி நேரும்போதெல்லாம் இந்தியாவின் உதவியை நாடுவதும் பின்னர் துச்சமாக மதிப்பதும்வழக்கம். இப்போது எந்த முகத்தோடு இந்திய உதவியை கேட்கிறார் ராஜபக்ஷே.
ராஜபக்ஷேவின் பசப்பு வார்த்தைகளுக்கு தமிழக, இந்திய அரசியல் தலைவர்களும் அரசுகளும் மயங்கக் கூடாது.தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.
அந்தக் குழு, கீழ்கண்ட கோரிக்கைளை வலியுறுத்த வேண்டும்.
1. இலங்கை அரசுடன் இந்தியா எந்தவிதமான பாதுகாப்பு உடன்பாடுகளையும் செய்யக் கூடாது
2. அந்த நாட்டுக்கு ஆயுத உதவியோ, ராணுவ பயிற்சியோ அளிக்கக் கூடாது
3. இலங்கைக்கு ஆயுதம் ஏற்றிச் செல்லும் விமானம், கப்பல்களை இந்திய விமான நிலையங்களிலோதுறைமுகங்களிலோ நிறுத்த அனுமதிக்கக் கூடாது
4. போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகளும் இலங்கை அரசும் முழுமையாக பின்பற்ற இந்தியா வலியுறுத்தவேண்டும்
5. வட கிழக்கில் தமிழர்களின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு அவர்களிடம் நிர்வாக பொறுப்புகளைஒப்படைக்க வேண்டும்
6. கேரள முதல்வர் அச்சுதானந்தன் கோவை உள்ளிட்ட மலையாளிகள் வசிக்கும் பகுதிகளில் தமிழை முதன்மைமொழியாக கற்பிக்க விலக்கு அளிக்கக் கோரியது கண்டிக்கத்தக்கது. கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை,கொல்லம் ஆகிய இடங்களில் 30 சதவீத தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கெல்லாம் மலையாளம் படிப்பதில்இருந்து தமிழர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதா?
இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. ஆனால், மத்திய அரசு அவர்களைவேண்டா விருந்தாளிகளாக நினைக்கிறது. அகதிகளுக்கு செய்யப்பட்டு வரும் நிவாரணம் திருப்தியாக இல்லைஎன்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications