அதிமுக மகளிர் அணி மா.செக்கள் மாற்றம்
சென்னை:
பல்வேறு மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:வட சென்னை மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராக சாந்தா ஜெயபால், தென் சென்னை மாவட்டமகளிர் அணி செயலாளராகக சரஸ்வதி ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட மகளிர் அணி செயலாளராக பானுமதி, இணை செயலாளராக அஞ்சம்மாள், திண்டுக்கல் மாவட்டமகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக குமுதா பெருமாள், இணை செயலாளராக முத்துலட்சுமி,தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளராக குருத்தாய் என்ற விண்ணரசி, இணை செயலாளராககுமாரத்தாய் ஆகியோர் நியமிக்கப்படடுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி செயலாராக டோரத்தி சாம்சன், இணை செயலாளராக ஹெப்சிபாய்இன்பராணி, துணை செயலாளராக விஜயா பிரான்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார்.
இதைத் தவிர வேறு சில பதவிகளுக்கும் புதியவர்களை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட துணை செயலாளராக சிவராஜ், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிசெயலாளராக மானாம்பதி ரவிசங்கர், நகர செயலாளராக வி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல ஒன்றிய, நகர செயலார்களும் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications