பாலகுருசாமி மீதான ஊழல் புகார்:ஆளுனரின் செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மீதான ஊழல்புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை 4 வாரங்களுக்குள்தெரிவிக்குமாறு தமிழக ஆளுனரின் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இது தாடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாககல் செய்த மனுவில்,

பாலகுருசாமி கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005 வரை அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தராக இருந்தார். அவரது பதவி முடியும் தருவாயில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டாக்டர் சிட்டிபாபு தலைமையில் கமிட்டிஅமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டி பாலகுருசாமிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க சிபாரிசு செய்தது. ஆனால்அதை ஆளுனர் ஏற்கவில்லை, குழுவைக் கலைத்து உத்தரவிட்டார்.

பாலகுருசாமி மீதான பல்வேறு ஊழல் புகார்கள் காரணமாகத்தான் அவருக்குப் பதவிநீட்டிப்பு வழங்கப்படவில்லை. இருபபினும், பாலகுருசாமியை ஆளுனர்நிராகரித்ததற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின கீழ் முழு விவரம் கேட்டுட ஆளுனர்அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். ஆனால் எந்தத் தகவலையும் ஆளுனர்அலுவலகம் எனக்கு அனுப்பவில்லை.

எனவே பாலகுருசாமி மீதான புகார்கள் மீது ஆளுனரின் செயலாளர் நடவடிக்கைஎடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார்.

இம் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர்அடங்கிய பெஞ்ச், 4 வாரத்திறகுள், ஆளுனர் அலுவலகத்தில் மனுதாரர் கொடுத்தமனுக்கள் மீது முடிவு எடுத்து செயலாளர் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+