வயதை அறிய கரோலினுக்கு மருத்துவ பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Caroline with her Mother

சினிமா பைனான்சியர் கோவி.கண்ணனால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்னர்கட்டாயக் கல்யாணம் செய்யப்பட்ட கரோலினுக்கு சென்னை அரசு மருத்துவனையில்வயதை அறிவதற்கான மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

கரோலின் விவகாரம் தற்போது உயர்நீதிமன்றத்தில் உள்ளது. கரோலினுக்கு 20 வயதுஎன்று கூறித்தான் அவரது பெற்றோர் கண்ணனுக்கு கரோலினை திருமணம் செய்துகொடுக்க முன் வந்தனர் என உயர்நீதிமன்றத்தில் கண்ணனின் வழக்கறிஞர்வாதாடினார்.

ஆனால் கரோலின்தரப்பு இதை மறுத்தது. கரோலின் இன்னும் மைனர் தான் எனவாதிட்டது. கரோலினுக்கு 16 வயதுதான் ஆவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றததில்தெரிவித்தார்.

இதையடுத்து கரோலினின் உண்மையான வயதை அறிய மருத்துவ பரிசோதனைக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து கரோலின், அவரது தாயார், தந்தை, வழக்கறிஞர்ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில், கரோலினுக்கு மருத்துவப் பரிசோதனைநடக்கிறது.

இந் நிலையில் கரோலின் நிருபரிடம் கூறுகையில்,

புதுவையில் இருந்து கோவி கண்ணனோடு சேர்ந்து என்னையும் பெற்றோரையும்கடத்தி வந்த போலீசார் மீது துறைரீதியிலான சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமேஎடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்படவில்லை.

என்னை கடத்திக் கொண்டு வந்த போலீசாரும் கோவி கண்ணனும் சென்னைமாம்பலத்தில் உள்ள பெண் வக்கீலின் வீட்டில் வைத்து அவர் முன்னிலையில் அடித்துஉதைத்து வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அங்கு வைத்து தான் என்னைகட்டாயக் கல்யாணம் செய்தார் கோவி கண்ணன்.

அதற்கு போலீசாரோடு பெண் வக்கீலும் உடந்தையாக இருந்தார். ஆனால், அவரைவழக்கிலேயே சேர்க்காமல் விட்டுள்ளனர். அதே போல என்னை தமிழக போலீசார்கடத்திச் செல்ல உதவிய புதுவை இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை இல்லை.

இந்த வழக்கில் புதுவை, தமிழக போலீசார் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

என் வாழ்க்கையை சீரழித்த கோவி கண்ணனுக்கு ஜாமீன் தரக் கூடாது. எனக்குநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். எனது கல்வியைத் தொடரவும் அமைதியானவாழ்க்கையை வாழவும் பாதுகாப்பு வேண்டும். இது தொடர்பாக தமிழக, புதுவைமுதல்வர்களிடம் மனு கொடுக்கவுள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+