பெரியார் சிலையின் நெற்றியில் சந்தன பட்டைநன்றி கெட்டவர்கள் செயல் -கருணாநிதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

Periyars statue

திண்டுக்கல்லில் பெரியார் சிலையின் நெற்றியில் சந்தனம், விபூதி பூசப்பட்டு மாலைஅணிவிக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் ரோடு சந்திப்பு, சாலை ரோடுசந்திப்பு பகுதியில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இரவோடு இரவாகநெற்றியில் விபூதியும், சந்தனமும் பூசப்பட்டிருந்தது.

மேலும் சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டு பக்கத்தில் வாழைப்பழத்தில்ஊதுபத்தியை சொருகி கொளுத்தியிருந்தனர்.

காலையில் வாக்கிங் போன சில திராவிடர் கழக தொண்டரகள் இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிலைமுன் ஏராளமான தி.க. தொண்டர்கள்கூடினர்.

பெரியார் சிலையை அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிசாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து தி.கவினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். சிலைக்கு பூசப்பட்ட விபூதி, சந்தனத்தை திகவினர் கழுவிவிட்டனர்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, பாமக எம்எல்ஏ ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட்உறுப்பினர் சிவபுண்ணியம், காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா ஆகியோர் சிறப்புகவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அவர்கள் கூறுகையில், பெரியார் சிலைக்கு சந்தனம், திருநீர் பூசி, தேங்காய் உடைத்து,ஊதுபத்தி கொளுத்தி அவமதித்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின்விடிவெள்ளியான பெரியாரை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

இதற்கு கருணாநிதி பதிலளிக்கையில்,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிலைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில்சிலைக்கு அல்ல, அவரது லட்சியம், குறிக்கோள் ஆகியவற்றுக்கு களங்கம் கற்பிக்கும்வகையில் சிலர் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த விஷமிகளை போலீசார்விரைந்து கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியாரை அவமானப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்தச் செயலைநன்றியுள்ள தமிழர்கள் யாரும் செய்திருக்க மாட்டார்கள். பன்றி குணம் படைத்தவர்கள்தான் செய்திருப்பார்கள். பன்றிகளை தெருவில் நடமாட விடக் கூடாது. அவர்கள் மீதுகாவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+