யுஎஸ்-இன்னொரு விமான விபத்தில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லெக்ஸிங்டன்:
அமெரிக்காவில் மேலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க விமானங்களை தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற பீதி நிலவி வரும்நிலையில் நேற்று முன்தினம் கென்டகி மாநிலம் லெக்ஸிங்டன் விமான நிலையத்தில்பயணிகள விமானம் விபத்துக்குள்ளானது.இதில் 49 பேர் பலியாயினர். நீளம் குறைவான, தவறான ரன் வேயில் இருந்திவிமானம் கிளம்பியதால் அந்த விபத்து ஏற்பட்டது.
இந் நிலையில் கென்டகி மாநலத்தில் மீண்டும் ஒருவிமான விபத்து நடந்துளளது.தென் கிழக்கு கென்டகியில் உள்ள கிக்காபூ விமான நிலையத்திலிருந்து 2 என்ஜின்பொருத்தப்பட்ட செஸ்னா ரக குட்டி விமானம் கிளம்பியது.
ஹஸார்ட் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம் மலைப் பகுதியில்விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications