விநாயகர் சிலை பாதுகாப்பு குழுக்களில் முஸ்லீம்கள்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
![]() |
திருவண்ணாமலை நகரில், அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விநாயகர் சிலைகள்பாதுகாப்புக் குழுக்களில்முஸ்லீம் சமுதாயத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.அதே போல திருவண்ணாமலை நகரிலும் முக்கிய சந்திப்புகளில் சிலைகள்வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இரவு, பகலாக பாதுகாப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் பலவற்றில மதநல்லிணக்கத்தைப் பேணும் வகையில், முஸ்லீம்சமுதாயத்தினரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேதவீதி சுப்பிரமணியர் கோவில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைபாதுகாப்புக் குழுவில் காய்கறிக்கடை நடத்தி வரும் ரகீம் என்பவர் உறுப்பினராகஉள்ளார்.
இதேபோல ஒரு விநாயகர் கோவிலில் 3 நாட்களுக்கு அன்னதானம் செய்ய பாஷாஎன்ற பலசரக்குக் கடை உரிமையாளர் முன் வந்துள்ளார்.
இதேபோல மேலும் பல குழுக்களில்முஸ்லீம்கள் சேர்க்கப்பட்டு திருவண்ணாமலைநகரம் மத நல்லிணக்கததிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.













Click it and Unblock the Notifications