தூக்கி எறிந்தார் தாலியை-சேர்ந்தார் காதலனுடன்
பண்ருட்டி:
பஞ்சாயத்தார் முன்னிலையில் தனது கணவர் கட்டிய தாலியை தூக்கி வீசி விட்டுகாதலித்த நபருடன் சென்றார் பண்ருட்டியைச் சேர்ந்த இளம்பெண்.
பண்ருட்டியை சேர்ந்தவர் மஞ்சுளாவும் அறிவு என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்துவந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுந்தரராஜன் என்பவருக்குமஞ்சுளாவை திருமணம் செய்து வைத்தனர்.இதையடுத்து பெற்றோரின் வீட்டுக்கு கணவருடன் வந்த மஞ்சுளா வீட்டை விட்டுவெளியேறினார்.
தனது மகளை அறிவு கடத்தி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் மஞ்சுளாவினதந்தை சுப்பிரமணியன். போலீஸார் மஞ்சுளாவையும் அறிவையும் தேடிய நிலையில்விழுப்புரத்தில் இருவரும் பிடிபட்டனர்.
ஆனால், நான் வாழ்ந்தால் அறிவுடன்தான் வாழ்வேன் என்று மஞ்சுளா பிடிவாதம்பிடித்தார். இருப்பினும் அவரை கட்டாயப்படுத்தி ஊருக்கு அழைத்து வந்தனர்.
அப்போது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள மஞ்சுளா முயன்றார்.ஆனால் அவரை வீட்டினர் காப்பாற்றி விட்டனர்.
![]() |
பிரச்சினைக்கு முடிவு காண ஊரைக் கூட்ட (பஞ்சாயத்தைக் கூட்ட)முடிவுசெயய்ப்பட்டது. மருங்கூர் ஊராட்சித் தலைவர் பூபதி தலைமையில் பஞ்சாயத்துகூடியது.
மஞ்சுளா, அவரது கணவர் சுந்தரராஜன், காதலர் அறிவு ஆகியோரை அழைத்துபஞ்சாயத்தார் விசாரித்தனர்.
அப்போது அறிவுடன்தான் வாழ்வேன என்று மஞ்சுளா திட்டவட்டாக தெரிவித்தார்.இதனால் கோபமடைந்த கணவர் சுந்தரராஜன், என்னை வேண்டாம் என்றுசொல்கிறாயே, அப்படியானால் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கு என்றார்ஆத்திரமாக.
அதைக் கேட்ட மஞ்சுளா, கொஞ்சம் கூட தயங்காமல் இந்தா பிடி நீ கட்டிய தாலி என்றுகழுத்திலிருந்த தாலியைக் கழற்றி சுந்தரராஜனிடம் வீசினார்.
ஊரே அதிர்ந்து பானது. இனியும் மஞ்சுளாவை தடுக்க முடியாது என்றுமுடிவு செய்தபஞ்சாயத்தார், மஞ்சுளாவுக்கும் அறிவுக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர்.
இதையடுத்து நெய்வேலியில் கோவிலில் வைத்து அறிவு, காதலி மஞ்சுளா கழுத்தில்தாலி கட்டினார்.
அதன் பின்னர் புதிய கணவருடன் ஏற்கனவே தனது தந்தை புகார் கொடுத்திருந்தமுத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்திற்கு மஞ்சுளா சென்றார். என்னை யாரும்கடத்தவில்லை. அறிவுடன் சென்ற நான் இப்போது அவரைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டேன் என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை அத்தோடு மூடிவிட்டு அவரை போலீசார் வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.













Click it and Unblock the Notifications