கேரள அமைச்சர் சில்மிஷம்: லட்சுமியிடம் துருவித் துருவி விசாரணை
சென்னை:
![]() |
கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோசப் மீதான செக்ஸ் சில்மிஷப் புகார் தொடர்பாக டிவி நடிகை லட்சிமிகோபகுமாரிடம் கேரள பெண் ஐ.ஜி. சந்தியா துருவித் துருவி விசாரணை நடத்தினார். நடந்த சம்பவங்களைஎழுத்துப் பூர்வமாக ஐஜயிடம் லட்சுமி எழுதிக் கொடுத்துள்ளார்.
செனனையிலிருந்து கொச்சி சென்ற விமானத்தில் முன்னாள் டிவி நடிகையும், செய்தி வாசிப்பாளருமான லட்சுமிகோபகுமார் சென்றபோது, அவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜோசப், கைகளை விட்டுசில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கேரள பெண் ஐஜி சந்தியா விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட லட்சுமியிடம் நேரில்விசாரிப்பதற்காக சென்னை வந்தார் சந்தியா. அவர் வந்தது முதல் விசாரணை நடத்தியது வரை படு ரகசியமாகவைத்திருந்தனர். சந்தியா எங்கு தங்கியுள்ளார், லட்சுமியிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தவுள்ளார் என்றவிவரம் தெரிவிக்கப்படவில்லை.
![]() |
இதனால் லட்சுமி கோபகுமாரிடம், சந்தியா எங்கு வைத்து விசாரணை நடத்தப் பாகிறார் என்பது மர்மமாகஇருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே லட்சுமியம், அவரது கணவர் கோபகுமாரம் வீட்டில் இல்லை.இந்த நிலையில் ஐஜி சந்தியாவின் உத்தரவின பேரில் திங்கள் கிழமை இரவு 11 மணிக்கே லட்சுமியும், அவரதுகணவரும வீட்டை விடடு வெளியேறி விட்டது தெரிய வந்தது.
நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரையிலும், நீலாங்கரை பகுதியில் ஒரு பஙகளாவில் வைத்துலட்சுமியிடம், ஐஜி சந்தியா விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையின் போது மேலும் சில போலீஸ்அதிகாரிகளும் சந்தியாவுக்கு துணையாக இருந்துள்ளனர்.
விசாரணை குறித்து லட்சுமியின் உறவினர் ஒருவர் கூறுகையில், கேரள போலீஸார் ஒரு ரகசிய இடத்தைக்குறிப்பிட்டு அங்கு வறுமாறு லட்சுமி, கோபகுமாரை வரவழைத்தனர். அந்த இடத்திற்கு இரவே அவர்கள் சென்றுவிட்டனர். விசாரணை நடந்த இடம் குறித்து தெரியவில்லை. ஆனால் செவ்வாயாக் கிழமை காலை தொடங்கிமாலை 5மணி வரை விசாரணை நடந்துள்ளது.
நடந்த சம்பவத்தை எழுதித்தருமாறு லட்சுமியிடம் கேட்டுள்ளனர். அவரும் எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர்50க்கும் மேற்பட்ட கேள்விகளை லட்சுமியிடம், ஐஜி சந்தியா கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி கண்ணீர் மல்க பதில்அளித்தார்.
முதலில் ஜோசப் அமைச்சர் என்பது தனக்குத் தெரியாது. ஆனால் பெரிய விஐபியாக இருக்கலாம் எனஎண்ணினேன். அதன பிறகு விமானததில் பயணம் செயத ஒருவர் தான் அவர் அமைச்சர் ஜோசப் என்றுஎன்னிடம் தெரிவித்தார் என்று சந்தியாவிடம், லட்சுமி தெரிவித்துள்ளார்.இந்த விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த மேலும் 7 பயணிகளிடம் சந்தியாவிசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது, கேரள டி.எஸ்.பிக்கள் சபீர், உன்னிகிருஷ்ண ராமச்சந்திரன்ஆகியோரும் உடன் இருந்தனர்.
விசாரணையை வீடியோவிலும் படமாக்கியுள்ளனர். இன்று பிற்பகல் சந்தியா திருவனந்தபுரம் திரும்புகிறார்.அதன் பின்னர் விசாரணை விவரங்களை முதல்வர் அச்சுதானந்தனிடம் அவர் அளிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications