காதலில் ஆண்டி ரோடிக், மரியா ஷரபோவா?
நியூயார்க்:
பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி ரோடிக்கும், டென்னிஸ் கவர்ச்சி புயல் மரியாஷரபோவாவும் காதலிப்பதாக வந்துள்ள செய்தியை ரோடிக் மறுத்துள்ளார். நாங்கள்வெறும் நண்பர்கள்தான் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் ஆண்டிரோடிக். அதேபோல பெண்கள் டென்னிஸில் முக்கிய நட்சத்திர வீராங்கனையாகவிளங்குபவர் மரியா ஷரபோவா. இவர்களது ஆட்டத்தை ரசித்த ரசிகர்கள் இப்போதுஇருவரும் காதலிப்பதாக வெளியாகும் செய்திகளையும் சுவாரஸ்யமாக கவனிக்கஆரம்பித்துள்ளனர்.ஆனால் ரோடிக் இதை மறுத்துள்ளார். நியூயார்க் நகரில் தொடங்கியுள்ள அமெரிக்கஓபன் டெனனிஸ் போட்டியில்ரோடிக் பங்கேற்றுள்ளார். புதன்கிழமை நடந்த முதல்சுற்றுப் போட்டியில் அவர் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் பிளஸ்ஸை வென்றார்.
போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வெற்றி குறித்து பேசாமல்தனக்கும், ஷரபோவாக்கும் இடையிலான நட்பு குறித்து விளக்கமாக பேசினார்.
நாங்கள் காதலர்கள் அல்ல. டேட்டிங் போவதும் கிடையாது. இதை ஏற்கனவேபலமுறை விளக்கியுள்ளேன். ஆனால் நீங்கள் (செய்தியாளர்கள்) தொடர்ந்துகாதலிப்பதாக எழுதி வருகிறீர்கள். நாங்கள் நண்பர்கள் என்பதே உண்மை.
![]() |
இருவரும் ஒரே துறையில் இருக்கிறோம். மரியா சிறந்தபெண். வெறும் பேச்சுடன்தான்எங்களது நட்பு நீடிக்கிறது. வேறு விசேஷம் ஏதும் எங்களுக்குள் இல்லை.
என்னை விட பிசியானவர் மரியா. எனவே இருவரும் சேர்ந்து சுற்றவது எனபதற்குவாய்ப்பே இல்லை என்றார் புன்னகையுடன் ரோடிக்.
2003ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ரோடிக், உலகின் நம்பர் ஒன்வீரராகவும் சிலகாலம் இருந்தார்.
![]() |
ரோடிக் கூறியதைபபோலவே, மரியாவும்,தனக்கும் ரோடிக்குக்கும் இடையே காதல்இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.முதல் சுற்று ஆட்டத்தில் ஹாலந்துவீராஙகனை மைக்கேலா கிராஜியக்கை 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில வீழ்த்தியமரியா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,
எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் வெளிபபடையாகபேச விரும்பியதில்லை.
இரண்டு டென்னிஸ் ஆட்டக்காரர்கள் நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும்கிடையாது. இதைப் பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் ஆச்சரிமில்லை. அதுதான்எங்களது நட்பு விஷயத்திலும் நடந்துள்ளது என்றார் ஷரபோவா.














Click it and Unblock the Notifications