விஜய்காந்துக்கு அவரது கட்சியின் கொள்கை தெரியுமா? கருணாநிதி
சென்னை:
விஜய்காந்த்துக்கு அவரது கட்சியின் கொள்கை என்ன என்று தெரியுமா என்று முதல்வர் கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.
அதிமுக மற்றும் தேமுதிகவில் இருந்து பலர் விலகி கருணாநிதி தலைமையில் திமுகவில் இணைந்தனர். அப்போதுகருணாநிதி பேசுகையில்,உங்களில் பலர் இப்போது தொடங்கப்பட்ட ஒரு புதிய கட்சியில் இருந்து (தேமுதிக) இங்கே வந்திருக்கிறீர்கள்.இதில் வேடிக்கை என்னவென்றால், அதில் இணைந்திருந்த உங்களுக்கு அந்தக் கட்சியின் கொள்கை தெரியுமோ,தெரியாதோ எனக்குத் தெரியாது.
ஆனால், அதை ஆரம்பித்தவருக்கே தெரியுமோ தெரியாதோ என்பது தான் முக்கியம்.
தாங்கள் இருந்த இடம், அல்லது தேர்ந்தெடுத்த இடம் திராவிட இயக்கம் என்ற உண்மையான இயக்கம் அல்லஎன்பதைப் புரிந்து கொண்டு உண்மையான இயக்கம் அல்ல என்பதைப் புரிந்து கொண்டு, உண்மையான திராவிடஇயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்.
திராவிட என்ற பெயர் வைத்துக் கொண்டதாலேயே எல்லோரும் திராவிடர்கள் ஆகிவிட முடியாது.
பேஷன் என்பார்களோ.. அது போல திராவிட என்று பெயர் வைப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது. காங்கிரஸ்கட்சியில் இருந்து பிரிந்து செல்பவர்கள் எல்லாம் தேசிய காங்கிரஸ், ஜனநாயக காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்என்று பெயர் வைத்துக் கொண்டது போல இப்போது எல்லோருக்கும் திராவிட என்ற முத்திரை தேவைப்படுகிறது.
அதை வைத்துக் கொண்டு சில பேர் நல்ல உணவுர்களையும் பரப்புகிறார்கள், நல்ல வாழ்வையும் அமைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
நீங்கள் அதை அடையாளம் கண்டு கொண்டு தான் உண்மையான திராவிட இயக்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்.உங்களை இந்த இயக்கத்தின் சார்பில் இருகரம் ஏந்தி வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications