அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்
வேலூர்:
வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற பெண்னை போலீசார் தேடி வருகின்றனர்.வாணியம்பாடியைச் சேர்ந்த சச்சிதானந்தம்-விஜயராணி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து இருதினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது.விஜயராணியின் தாயார் மற்றும் தங்கை இருவரும் மருத்தவமனையில் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்,விஜயராணியிடமும், அவரது தாயார் விக்டோரியா, தங்கை ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்தார். அவரதுதங்கையையும் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
சிறிது நேரம் கலகலப்பாக பேசிய அந்த பெண் மெதுவாக குழந்தையை கொஞ்சிக் கொண்டே வெளியே வந்தார்.அதன் பின் அந்த பெண் திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற அந்த பெண் வராததால்விகடோரியாவும், விஜயராணியும் பதட்டமடைந்தனர்.
![]() |
| குழந்தையை பறிகொடுத்த விஜயராணி |
மருத்துவமனை பணியாளர்களும், செக்யூரிட்டிகளும், பொதுமக்களும் சேர்ந்து குழந்தையுடன் சென்ற அந்தபெண்ணை தேடினர். அப்போது கருப்புக் கலர் ஜாக்கெட், புடவை கட்டிய ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு திருவண்ணாமலை நோக்கிச் சென்ற பஸ்சில் ஏறியதை பார்த்ததாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தகவல்கூறினார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை, ஆரணி, போளூர்,சந்தவாசல், கலசபாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் உஷார்படுத்தப்பட்டனர்.
வேலூர் நகர் முழுவதும் போலீசார் வாகன சோதணை நடத்தினர். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் உஷார் நடவடிக்கையில்இறங்கியுள்ளன. குறிப்பாக பிரசவ வார்டில் நர்சுகள், டாக்டர்கள், பிரசவத்துக்காக வந்த பெண்கள் ஆகியோர்விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலில் தனிப்பட்ட நபர் ஈடுபட்டுள்ளாரா அல்லது இதன் பின்னணியில் ஏதாவது கும்பல்செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
குழந்தையை பறிகொடுத்த விஜயராணி மருத்துவமனையில் கதறியழுதபடியே இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications