சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன பொய்யே வினையாக மாறிப்போச்சு.. மீனாக்கு நடந்த நல்ல விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial July 15th episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜூலை 15ஆம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதாவது இதுவரைக்கும் வில்லியாக இருந்த ரோகிணி இன்று தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்துகிறார். அதே நேரத்தில் மீனாவின் வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணி வீட்டிற்கு வித்யா வருகிறார். அப்போது ரோகிணியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணி நான் துபாய்க்கு போக போறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு வித்யா இதுவரைக்கும் கிரிஷ் அம்மா துபாய்ல இருக்குறான்னு பொய் சொல்லிட்டு இருந்த, இப்போ அதே நடக்க போகுது பாத்தியா? உண்மையிலே நீ சொன்ன வார்த்தை பழிக்க போகுது என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

பீல் பண்ணும் ரோகிணி

வித்யா முகத்துக்கு நேராக சொன்ன வார்த்தை ரோகிணிக்கு வருத்தத்தை கொடுக்கிறது. பிறகு ரோகிணி நான் துபாய்க்கு போகுறதுக்கு என்கிட்ட பணம் இல்லை. அதற்குத்தான் மனோஜ் கிட்ட 5 லட்சம் கேட்டிருக்கிறேன். அந்த பணம் கிடைத்ததும் நான் உடனே கிளம்பி விடுவேன் என்று வருத்தமாகவே சொல்கிறார். ஆனால் ரோகிணி உண்மையிலேயே மனது மாறிவிட்டாரா? இல்லை நாடகமா? என்று புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அடுத்த கட்டத்தில் மீனா சங்க கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சந்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். அதை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சிந்தாமணி சந்தா செலுத்த முடியாது என்று திமிராக பேசிவிட்டு அங்கிருந்து போகிறார். அந்த நேரத்தில் ஒருவர் வந்து சிந்தாமணியிடம் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆர்டர் வருகிறது அந்த நிறுவனத்தோட மேனேஜர் வந்திருக்கிறார் என்று சொன்னதும் சிந்தாமணி அவரே வரவேற்று உட்கார வைத்து பேசுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்

ஆனால் அந்த நபர் இங்கிலீஷிலேயே எல்லாம் பேசிக் கொண்டிருக்க சிந்தாமணிக்கு எதுவும் புரியாமல் எஸ் நோ என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கடைசியில் அந்த மேனேஜருக்கு சிந்தாமணி பேச்சு பிடிக்காததால் உங்களுக்கு இங்கிலீஷ் பேச தெரியல.. நான் போறேன் என்று கிளம்புகிறார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனா அந்த நபரை கூப்பிட்டு அமர வைத்து அவரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்.

மீனா இப்படி பேசியதும் அந்த மேனேஜரும் ஆர்டரை மீனாவிற்கே கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிந்தாமணிக்கு கடும் கோபம் வருகிறது. மீனாவுடைய வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு மீனா தனக்கு கிடைத்த பெரிய ஆர்டர் பற்றி முத்துவிடம் சொல்வதற்காக ஸ்வீட் பாக்ஸுடன் போகிறார். முத்துவும் பெரிய ஆர்டர் விஷயத்தை கேள்விப்பட்டதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டு மீனாவை பாராட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Siragadikka Aasai serial Vijay TV

நாளை எபிசோடு

நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மீனாவுக்கு திடீரென வயிறு வலி ஏற்படுகிறது. பிறகு அவருடைய தோழிகள் எல்லோரும் ஹாஸ்பிடலில் கொண்டு சேர்க்கின்றனர். அங்கு அவர் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் முத்து ஓடிப் பதறி ஓடி வருகிறார். பிறகு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது என்று எல்லோரும் காத்திருக்கின்றனர்.

நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவின் புது அவதாரம்.. சன் டிவி சீரியல் ப்ரோமோவில் கவனித்தீர்களா? ரசிகர்கள் பாராட்டு
அடுத்ததாக டாக்டர் வந்து மீனாவிடம் எதையோ சொல்கிறார். எல்லோரும் வெளியே வந்து ஹாஸ்பிடல் வாசலில் நின்று கொண்டிருக்கும் போது ஸ்வேதா மீனாவிடம் கவனமாக இருங்க.. வெயிட் தூக்காதீங்க, ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அந்த பக்கமாக ஆட்டோவில் போகும் விஜயா இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

ஆடிஷன் போன பிரபல சீரியல் நடிகை.. நி***மாக போட்டோ எடுத்த தயாரிப்பாளர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
பிறகு அந்த ஹாஸ்பிடல் பெயரை பார்க்கிறார். அது கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பார்க்கும் ஹாஸ்பிடல் என்பதால் விஜயாவிற்கு குழப்பம் வருகிறது. இதனால் மீனா கர்ப்பமாக இருக்கிறார் என்று விஜயா நாளைக்கு ஏதாவது பஞ்சாயத்தை ஏற்படுத்துவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+