2 மாசத்தில் அருண் ஐபிஎஸ்சை மாற்றிட்டாங்க.. விஜய்க்கு யார் மேலேயும் நம்பிக்கை இல்லை.. அதிமுக மாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு விஜய் அல்ல.. ஓராயிரம் விஜய் வந்தாலும் அதிமுக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார். இப்போ யார் மேலயும் விஜய்க்கு நம்பிக்கை இல்லை. எந்த அரசு அதிகாரிகளுக்கும் விஜய் மீது நம்பிக்கை இல்லை.. இதனால் தான் அருண் ஐபிஎஸ்சை நீக்கிவிட்டு வேறு ஒரு அதிகாரியை நியமித்துள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் தவெக ஆட்சி 5 ஆண்டுக்கு நீடிக்காது.. 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப் போகிறது. விஜய் அரசு மற்ற கட்சிகளின் ஆதரவு முட்டுகளால் தான் நின்று கொண்டு இருக்கிறது. முட்டை தூக்கினால் தவெக ஆட்சி கவிழும் என பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

RB Udhayakumar Slams Vijay Trust No One IPS Officer Transfer Sparks Fresh Debate

அப்பாவை காணோம்னு தேடுறீங்க

சட்டசபையில் அப்பாவை காணோம்னு தேடுறீங்க.. ஓடு ஓடு என்று ஓடுறீங்க.. உங்க பெத்த அப்பா பெயரை மட்டும் சொல்லிவிட்டு அதிமுகவை அபகரிக்க முயற்சி எடுப்பதற்கு தயாரா? ஒரு விஜய் அல்ல.. ஓராயிறம் விஜய் வந்தாலும் அதிமுக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இது தான் அதிமுக வரலாறு.. அதிமுகவை அழிக்க இந்த பூமியிலே இதுவரை எவரும் பிறக்கவில்லை. இனியும் பிறக்கப் போவது இல்லை.

புஸ்ஸி ஆனந்த்

அதிமுகவில் இருந்து ஏன் நீங்க வஞ்சகம் வைத்து, அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்கிறீர்கள். அவரோடு ஒருத்தர் இருக்காரு.. புஸ்ஸி ஆனந்த் என ஒருத்தர்.. இங்க யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.. அவர் புதுவையை சேர்ந்தவர்.. அவர் சொல்கிறார்.. மாண்புமிகு விஜய் அவர்களே.. அள்ளிக்கொண்டு போவதும், அள்ளிகொண்டு வருவதும் தான் எங்க வேலை.. அவரை நம்புகிறவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை..

கெட்டுப்போனது தான் சரித்திரம்.. என்னது தான் சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. முட்டாளையெல்லாம் அமைச்சராக வைச்சுக்கிட்டு என்னதான் செய்யுறது.. அந்த அமைச்சரவையில் உட்காத்திருந்த ஒவ்வொருவரும் தினமும் பேசிக்கொண்டு இருப்பதை கேட்க முடியல. நெஞ்சு வலிக்கு.. டெய்லி மாத்திரையை கையில் வைத்துக்கொண்டு தான் போக வேண்டியிருக்கு..

5 வருஷம் நீடிக்காது

ஆட்சி அமைச்சு 2 மாதம் தான் ஆகுது. லஞ்ச ஒழிப்புத்துறையில் அருண் ஐபிஎஸ்சை போட்டாங்க.. இப்போ 2 மாதத்தில் அவரை மாற்றிவிட்டு மகேஷ்வரி என்பவரை போட்டு இருக்காங்க.. இப்போ யார் மேலயும் விஜய்க்கு நம்பிக்கை இல்லை. எந்த அரசு அதிகாரிகளுக்கும் விஜய் மீது நம்பிக்கை இல்லை. தலைமைச் செயலாளர்களுக்கும் செயலர்களுக்கும் யாருக்குமே முதல்வர் மீது நம்பிக்கை இருக்கா என தெரியவில்லை. இதே போல இங்க இருக்கிறவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை இல்லை.

யாரும் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆட்சி 5 வருஷத்திற்கு நீடிக்கும் என நினைக்க வேண்டாம். 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அங்காள பரமேஷ்வரி அருளால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்க போகிறது. அப்போ 3 வருஷம் தவெக ஆட்சி அமைக்கும் என நீங்க நினைக்காதீங்க.. இப்போ தவெக அரசு முட்டு கொடுத்ததால் தான் நீடிக்கிறது. முட்டுவை தூக்கிவிட்டால் தவெக ஆட்சி கீழே விழுந்துவிடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+