பா.ம.க.வின் மக்கள் டிவி
சென்னை:
பாமக சார்பில் மக்கள் தொலைக்காட்சி என்ற தனியார் தொலைக்காட்சி செப்டம்பர் 6ம்தேதி தொடங்கப்படுகிறது.
திமுகவுக்கு ஆதரவாக சன் டிவியும், அதிமுகவுக்காக ஜெயா டிவியும் உள்ளன. இதேவரிசையில், மற்றொரு முக்கிய கட்சியான பாமகவுக்கு தனக்கென்று தனியாகதொலைக்காட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் டிவிஎன்ற பெயரில் புதிய தொலைக்காட்சி அலைவரிசையை அக்கட்சி தொடங்குகிறது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், செப்டம்பர்6ம் தேதி மக்கள் டிவி தொடங்கப்படுகிறது. காமராஜர் அரங்கில் தொடக்க விழாநடைபெறும்.
இது மற்றும் ஒரு டிவியாக இருக்காது. மாற்றுத் தொலைக்காட்சியாக இருக்கும். இதில்5400 பேர் பங்குதாரர்களாக இருப்பார்கள். இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனம்ஆகும். ஒரு நாளைக்கு 7 முறை செய்திகள் ஒளிபரப்பாகும். தமிழுக்குத் தான் இந்தத்தொலைக்காட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படும்
இந்த தொலைக்காட்சியில் புகைபிடிப்பது போன்ற, மது அருந்துவது போன்றகாட்சிகள் கண்டிப்பாக இடம்பெறாது. அதேபோல திரைப்படங்களுக்கும்முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அதே சமயம், மூன்று மாதத்திற்கு ஒருமுறைவிருது பெற்ற திரைப்படங்கள் காட்டப்படும்.
ஆரம்பத்தில் ஆசிய நாடுகளில் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம். 3மாதங்கள் கழித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் இதை காண முடியும். ஆரம்பமுதலீடாக ரூ. 5 கோடி நிதியுடன் மக்கள் டிவி ஆரம்பிக்கப்படுகிறது. இது அரசியல்சார்பற்ற தொலைக்காட்சியாக இருக்கும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளை இந்ததொலைக்காட்சி ஒளிபரப்பும். எனவே தான் இதற்குப் பொருத்தமாக மக்கள் டிவிஎன்று பெயரிடப்பட்டுள்ளது.
மக்கள் டிவி தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள்பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, சிபிஎம் தலைவர் வரதராஜன், சிபிஐதலைவர் தா.பாண்டியன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications