குப்பை மேடு.. பாலிதீன் பையில் 5 சிசுக்கள்
சிதம்பரம்:
குறை மாதத்தில் பிறந்து, இறந்த 5 சிசுக்கள் பாலித்தீன் பைகளில் குப்பை மேட்டில்போடப்பட்டிருந்தன.
சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மீன் விற்பனைமையம் உள்ளது. இந்த கடைகளுக்குப் பின்புறம் திறந்த வெளி மைதானத்தில் குப்பைகொட்டப்படுகிறது. மலை போல குப்பை குவிந்து கிடக்கிறது.இன்று காலை மீன் மார்க்கெட்டுக்கு வந்த ஒருவர் அந்த குப்பை மேட்டில் சிசு ஒன்றின்கை தெரிவதைப் பார்த்து திடுக்கிட்டார். அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டுஅருகில் சென்று பார்த்தபோது பாலித்தீன் பையில் இறந்த குழந்தை கிடந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அப்போதுஅங்கு பெரிய பாலித்தீன் பையில் ஐந்து குறை மாத சிசுக்கள் கிடந்தன.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து அந்தசிசுக்களின் உடல்களை மீட்டனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்தக்குழந்தைகள் பிறந்திருக்க்க கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குறை மாத சிசுக்கள் குப்பை மேட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications