அர்ஜூன் சிங்-கருணாநிதி: அர்ஜூனன்-கண்ணன்
சென்னை:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் லட்சியத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்,பாரத போரில் அர்ஜூனன் நின்றது போல் உறுதியோடு நிற்க வேண்டும். அதற்கு நாங்கள் கண்ணன் போலஉதவியாக இருப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்
சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் செனட் இல்ல திறப்பு விழாஇன்று நடந்தது.ஜனாதிபதி அப்துல் கலாம், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம்ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில் கருணாநிதி பேசியதாவது,
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் இசைக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தை அன்னைபல்கலைக்கழகம் ன்ெறு குறிப்பிட்டுள்ளார் கவிஞர். இந்த பல்கலைக்கழகத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்இந்த பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகாலம் படித்ததாகக் குறிப்பிட்டார்.
எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தை அன்னைபல்கலைக்கழகம் என்று அழைக்கும் தகுதி எனக்குண்டு. அன்னைகுரிய அறிவு, ஆற்றல், அடக்கம், புலமை,தாய்மை, பாசம், நேசம், பற்று அனைத்தும் கொண்டு சிறப்பானவர்களை உருவாக்கியுள்ளது இந்த பல்கலை.
ஜனாதிபதி கலாம் பங்கேற்ற இந்த விழாவில் நானும் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர்என்னைப் போல விழாவுக்கு வருகிறவர் அல்ல. பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட செனட் கட்டடத்தைதிறப்பதற்கு முன்பே நேரில் பார்வையிட்டுவிட்டு தான் இப்போது வந்து திறந்திருக்கிறார். விழா, மேடை, மாலைஎன்றால் போதும் என்று நினைப்பவர் அல்ல அவர்.
இந்த பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு விழாவில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அன்றையஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று 150வு ஆண்டு விழா. இதில் ஜனாதிபதிகலாம், கவர்னர் பர்னாலா ஆகியோரோடு நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் அறிவு, ஆற்றல் மிக்க பெரியோர்கள் உருவாகியிருக்கிறார்கள். பிற்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்காக, இட ஒதுக்கீடு பெற வேண்டும்என்பதற்காக, 1913ம் ஆண்டில் டாக்டர் நடேசனார், பி.டி.தியாகராஜன், டி.என்.நாயர் ஆகியோர்திராவிடர்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள்.
அவர்களது கனவு நிறைவேறி இன்று திராவிட இயக்கம் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின்போது 1923ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்மூலம் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து பயன்பெறும் நிலைஏற்பட்டது.
27 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பு அப்போது தான் உருவாக்கப்பட்டது. 1950ல் சிக்கல்ஏற்பட்டபோது பெரியார், அண்ணா, காமராஜர் போன்றோர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்தனர்.
பெருந்தலைவர் காமராஜர் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.அதன்மூலம் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இந்தியா முழுமைக்கும் இந்த சட்டம்இயற்றப்பட்டது. திராவிட இயக்கத்தி" லட்சியக் குறிக்கோள் இது தான்.
இட ஒதுக்கீடு வழங்கும் லட்சியத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், பாரத போரில் அர்ஜூனன் நின்றதுபோல் நிற்க வேண்டும். அதற்கு நாங்கள் கண்ணன் போல உதவியாக இருப்போம். லட்சியத்தை அடைவதில்உறுதியோடு இருப்போம் என்றார் கருணாநிதி.
முன்னதாக ப.சிதம்பரம் பேசுகையில், இந்த பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் பயின்ற மாணவர் என்ற முறையில்இந்த 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின்ஆராய்ச்சி மையத்தை விரிவாக்க ரூ. 100 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications