புலிகளுடன் ஜெ கூட்டு-திமுக அரசை கவிழ்க்க சதி காங். தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிதம்பரம்:
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர்ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்ததொடரபை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியைக்கவிழ்க்க ஜெயலலிதா சதி திட்டம் தீட்டியுள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடாசட்டத்தின் கீழ் கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது வைகோவுடன்கூடடணி வைத்துள்ளார். வைகோ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசி வருகிறார்.
இதை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஜெயலலிதாவின் இந்த செயல்சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தவேண்டும்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவருடன் சேர்ந்துபொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த ஜெயலலிதா அன்று திடீரெனவரவில்லை.
இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தம்பிதுரை விளக்குயிைல்,பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே தங்களது தலைவர் அந்தக் கூட்டத்திக கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.
எனவே ராஜீவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்ற தகவல்முன்கூட்டியேஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே அதுகுறித்தும் விரிவானவிசாரணை நடத்தப்பட வேண்டும்.
இயக்குனர் பாரதிராஜா விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்துள்ளதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. பாரதிராஜா தீவிர ஜெயலலிதா ஆதரவாளர்.
நெய்வேலியில் காவிரிப் பிரச்சினைக்காக திரையுலகினர் நடத்தியபோராட்டத்தின்போது பாரதிராஜாவுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு கொடுத்தார்.எனவே இதுவும் கவலைககுரிய விஷயம் தான் என்றார் கிருஷ்ணசாமி.
விடுதலைப் புலிகளும்-திமுகவும் சேர்ந்து தான் ராஜிவைக் கொன்றதாக முன்பு பழிசுமத்தினார் ஜெயலலிதா. இப்போது அதே பழியை ஜெயலலிதா மீது சுமத்தியுள்ளார்கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications