சம்பூரை மீட்டுவிட்டோம்: இலங்கை ராணுவம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூரை கடும் சண்டைக்குப் பின்னர் மீட்டுள்ளதாகஇலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தாக்குதலை நிறுத்துவதாகவும்ராணுவம் கூறியுள்ளது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் திரிகோணமலை துறைமுகம் அருகேஉள்ளமுக்கியமான பிராந்தியம்தான் சம்பூர். இப்பகுதி விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்தது.இப்பகுதியை மீட்க ராணுவம் கடும் தாக்குதலை தொடங்கியது. விடுதலைப் புலிகளும்பதில்தாக்குதல் தொடுத்ததால் சம்பூரைப் பிடிக்கும் ராணுவத்தின் முயற்சி தடைபடடது.
கடந்த சில நாட்களாக நடந்த கடும் சண்டையின் இறுதியில் சம்பூரைகைப்பற்றிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்துதான்திரிகோணமலை கடற்படைத் தளத்தை புலிகள் கடுமையாக தாக்கி வந்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும்முக்கிய சாலைப் பகுதியையும் இங்கிருந்துதான்புலிகள் தகர்த்தனர்.
தற்போது புலிகள் வசமிருந்து சம்பூர் மீட்கப்பட்டு விட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கெகிலிய ரபுக்வெல்லா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்தெரிவித்தார். அவர் கூறுகையில், கடல் புலிகளின் முகாம்கள் அடங்கியதிரிகோணமலை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதுஎன்றார்.
ஆனால், சம்பூரில் புறப் பகுதிகளில் தாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகபுலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்தப் பகுதியில் இருந்து புலிகள் தாங்களவே பின்வாங்கியுள்ளதாகவும், அவர்கள் வேறு இடத்தில் திடீர் தாக்குதல் நடத்தக் கூடும்என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லியின் ஆய்வாளர் இக்பால் அதாஸ் கூறுகையில,
இந்தப் பகுதியில் கடல் புலிகளின் நினைவிடம், புலிகள் அலுவலகம் தவிர சிலகட்டடங்கள் தான் உள்ளன. ராணுவம் தொடர்ந்து ஆர்ட்டிலரி தாக்குதல் தொடுத்ததால்புலிகள் பின் வாங்கியுள்ளனர் என்றார்.
பதிலுக்கு புலிகள் வேறிடத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.
மறுவாழ்வு அமைப்பின் நிதி முடக்கம்:
இதற்கிடையே தமிழ் மறுவாழ்வு மையத்தின் 7.5 லட்சம் டாலர் நிதியை கொழும்பின்சென்ட்ரல் வங்கி முடக்கியுள்ளது. இந்த நிதி சுனாமி நிவாரணம் உள்ளிட்டபணிகளுக்காக திரப்பட்டது. ஆனால், இந்த நிதி புலிகள் ஆயுதம் வாங்குவதற்காகதிருப்பிவிடப்பட்டு வருவதாக சென்ட்ரல் வங்கியின் புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் நிவாரணப் பணிகளையும் இலங்கை ராணுவம் தடுத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications