பண்டிட் மகாராஜ் கஞ்சா சாமியார்!!
சென்னை:
சாமியாராக வலம் வந்து கொண்டே சைடில் கஞ்சா விற்று காசு பார்த்த ஆசாமியைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நகரின் பல பகுதிகளில் முன்பு கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறந்தது. பலரூபங்களில் கஞ்சாவை விற்று வந்தனர். சாக்லேட்டில் மறைத்து வைத்து விற்பது தான்ரொம்ப பிரபலமாக இருந்தது. ஆனால் அந்த விற்பனையை போலீஸார் கடும்நடவடிக்கை எடுத்து ஒடுக்கிய பின்னர் கஞ்சா நடமாட்டம் சற்றே குறைந்திருந்தது.இந்த நிலையில், பூக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டப் பறக்கத்தொடங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையிலான போலீஸ் குழு சம்பந்தப்பட்ட இடத்துக்குமாறுவேடத்தில் சென்றது.
அந்த வீட்டில் சாமியார் ஒருவர் இருந்தார். அவர் தான் கஞ்சா விற்பதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. இதையடுத்து வாடிக்கையாளர் போலசாமியாரை அணுகிய போலீஸார் கஞ்சா பொட்டலம் வேண்டும் என கேட்டுள்ளனர்.பணத்தை வாங்கிக் கொண்டு சாமியார் கஞ்சா கொடுத்தார். உடனடியாக அவரைபோலீஸார் கைது செய்தனர்.
அவரது வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ளகஞ்சா மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். சாமியாரின் பெயர்தேவேந்திரகுமார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். மனைவியும், நான்குகுழந்தைகளும் உள்ளன.
இவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர். தேவேந்திர குமார் மட்டும்சென்னையில் இருக்கிறார். சாமியார் போல வேடமிட்டுக் கொண்ட அவர் எப்போதும்பக்திப் பழமாக காட்சி தருவார்.
வெள்ளிக்கிழமை தோறும் கடைகளுக்குச் சென்று பூஜை செய்வார். அதற்காககடைக்கு தலா 50 ரூபாய் வாங்குவார். மார்வாடி வீட்டுக் குழந்தைகளுக்கு பெயர்சூட்டவும் செய்வார்.
இவரை பண்டிட் மகாராஜ் சாமி என்று அழைப்பார்களாம். இவர் தனது வீட்டில் தினசரிபூஜை செய்வாராம். அந்த பூஜையின் போது தான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தார். லேகியம் போல கஞ்சாவை தயாரித்து அதை வெற்றிலைக்குள் வைத்துவிற்பாராம் சாமியார். ஒரு உருண்டை கஞ்சா லேகியத்தை ரூ. 100 வரை விற்பாராம்.
இவருக்கு தேவையான கஞ்சா இலைகளை பீகாரில் உள்ள ஒரு சாமியார் அனுப்பிவைத்து வருகிறாராம்.
கைது செய்யப்பட்ட சாமியாரை போதை ஒழிப்புப் பிரிவுக்கு போலீஸார் கொண்டுசென்றனர். அங்கு சென்ற சாமியார், அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி படங்களுக்குப்பூஜை செய்தார். பின்னர் போலீஸாரின் விசாரணைக்கு உட்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications