அனிதா தம்பிகளின் வங்கி லாக்கர்களில் சோதனை
மதுரை:
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதர்கள் இருவரின் வங்கிலாக்கர்களைத் திறந்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன்ஆகியோரது வீடுகள், உறவினர் வீடுகள், பினாமிகளின் வீடுகள், வணிக நிறுவனங்கள்உளளிடடவற்றில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலை முதல் மாலை வரைஅதிரடி சோதனை நடத்தினர்.வருமானத்தை மீறி சொத்து சேர்த்திருப்பதாக மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் மீதும்,தூத்துக்ககுடியில் அனிதா மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின்அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஓ.பி தங்கியிருந்த சென்னை பிரசிடென்சி ஹோட்டல் அறை, எம்.எல.ஏ. விடுதிஅறை, பெரியகுளத்தில் உள்ள வீடுகள், மகன், சகோதரர்கள், சகோதரி ஆகியோரதுவீடுகள், கொடவுன் உள்பட மொத்தம் 20 இடங்களிலும், அனிதா ராதாகிருஷ்ணன்வீடுகள், அவரது சித்தப்பாவும் முன்னாள அமைச்சருமான நடேசன பால்ராஜின் வீடு,மகன் வீடு, தம்பிகள் வீடுகள் உள்பட அனிதா சம்பந்தப்பட்ட 13 இடங்களிலும்சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.இந் நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர்கள் இருவரின் வங்கிலாக்கர்களைத் திறந்து இன்று சோதனை நடத்தபப்டட்து.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் உள்ளஇருவரது லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி பெருமாள் சாமிதலைமையிலான போலீஸார் திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.
ஓ.பி வைத்திருந்த பாக்கெட் மணி ரூ. 3000:
முன்னதாக நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியபோது சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. பன்னீர் செலவம் சென்னைக்கு வந்தால்பிரசிடென்சி ஹோட்டல் அறை எண் 516ல்தான் தங்குவார். நேற்று சோதனை நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு தான் சென்னைக்கு வந்திருந்தார்.
போலீஸார் சோதனைககு வந்திருப்பதை அறிந்ததும் அவர் முழுமையாகஒத்துழைப்பு அளிததார். அவர்கள் கேட்ட கேளவிகளுக்கு பதில் சொன்னார்.பின்னர் அவரது அறையில் போலீஸார் சோதனை போட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
பன்னீரிடம் வெறும் 3000 ரூபாய் மட்டும்தான் இருந்ததாம். கைச் செலவுக்காக இதை வைத்திருப்பதாக பன்னீர் கூற அதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு பறிமுதல் செய்யாமல் விட்டு விட்டார்களாம்.
ஆனால், பன்னீரின் மகன் ரவீந்திரநாத்தின் ஆழ்வார்ப்பேட்டை அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடடில் போலீஸார் சோதனை நடத்தியபோது ரூ. 1.5 லட்சம்ரொக்க பணம் இருந்தது.
அந்தப் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. பணம் இருந்ததாக பதிவு செய்து கொண்டு விட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications