ஹோடா விவகாரம்: ஜெ. புகாருக்கு தலைமைச் செயலர் மறுப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சையத் முனீர ஹோடா குண்டு வெடிப்புக்கைதி மதானிக்கு உதவியாக செயல்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ள புகாரில் உண்மை இல்லை என்று தலைமைச் செயலாளர்எல்.கே.திரிபாதி விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வருக்கும்,முன்னாள் தலைமைச் செயலாளருக்கும் தெரியாமல், முன்னாள் உள்துறைச்செயலாராக இருந்த சையத் முனீர் ஹோடா, ரகசியமாக நடவடிக்கை எடுத்து அப்துல்நாசர் மதானி, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்யும் வகையில், இரண்டுஅரசாணைகளை வெளியிட்டதாக முன்னாள் முதல்வரும், தற்பேதைய எதிர்க் கட்சித்தலைவருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து தொடர்புடைய கோப்புகளை பரிசீலனை செய்யும்படி முதல்வர்கருணாநிதி என்னை அறிவுறுத்தினார். அதற்கிணங்க கோப்புகளை நான் ஆழ்ந்துபரிசீலித்தேன்.
ஹோடாவுக்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டகுற்றச்சாட்டுக்களில் மதானி சிறையிலிருந்து தப்பிச் செல்வது குறித்து எந்தஇடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மருத்தவச் சிகிச்சைக்காக கேரளா செல்வதற்குதனக்கு அனுமதி தரவேண்டும என்று கோரி மதானி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு பதிவுசெய்திருந்தார்.
அதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆணை உறுதி ஆவணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு அரசின்சட்டத்துறை, காவல்துறை, சிறைத் துறை ஆகிய துறைகள் கலந்தாலோசிக்கப்பட்டன.
தலைமைச் செயலக நடைமுறை விதிகளின் படி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யபட வேண்டிய ஆணை உறுதி ஆவணங்களுக்கு துறைச் செயலாளரே ஒப்புதல்வழங்கினால் போதுமானது. மதானி சென்னைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்குஅனுமதி அளிக்க உயர்நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டது. அவர் கேரளாவுக்குச்சென்று சிகிச்சை பெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகும்.
இப்படி செய்தது அரசின் உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் தானேதவிர வேறு இல்லை. இப்படிச் செய்தால், மதானி சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்குஅனுமதி அளித்ததாக பொருள் கொள்ள முடியாது.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தனது அறிக்கையில் முனீர் ஹோடாவுக்குஎதிராக குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லைஎன்று கூறியுள்ளார் திரிபாதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications