திருச்சி விமானத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இலங்கையிலிருந்து திருச்சி வரும் விமானத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என வந்தமிரட்டலால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலைய பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உதவி கமாண்டண்ட்சர்மாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 10ம் தேதி காலை 7.50 மணிக்கு இலங்கையிலிருந்து திருச்சி வரும்விமானத்தில் மனித வெடிகுண்டு ஒன்று வருகிறது.விமானம் திருச்சியில் தரையிறங்கியவுடன் அந்த நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்வார் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையம் உஷார் படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளைசெயலழிக்க வைக்கும் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர்.
விமான நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையம் செல்லும்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானம் இளங்கையில் கிளம்பும் முன்பே தீவிரசோதனை நடத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications