சிரியாவில் யுஎஸ் தூதரகத்தை தகர்க்க முயற்சி
டமாஸ்கஸ் & வாஷிங்டன்:
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற 4 தீவிரவாதிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 4 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியபடி தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். ஒரு காரையும்வெடிகுண்டு சிதைத்தனர். துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைய முயன்ற அவர்களை சிரியா பாதுகாப்புப்படையினர் தடுத்து திருப்பிச் சுட்டனர்.இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
மேலும் தீவிரவாதிகள் வந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேனையும் பாதுகாப்புப் படையினர் தடுத்துஅங்கிருந்து வெளியேற்றி அதிலிருந்த குண்டுகளை அகற்றினர். சிரியா பாதுகாப்புப் படையினர் அதி வேகத்தில்செயல்பட்டதால் அமெரிக்க தூதரகம் தப்பியது.
ஒசாமாவை பிடிப்போம்: புஷ்
இதற்கிடையே ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் என அதிபர் ஜார்ஜ்புஷ் கூறியுள்ளார். செப்டம்பர் 11 தின தாக்குதலின் 5வது ஆண்டையொட்டி அவர் பேசுகையில்,
ஒசாமா தொடர்ந்து மறைந்து ஓடிக் கொண்டிருக்கிறான். எத்தனை காலம் ஆனாலும் அவனை பிடிப்போம்.அவனை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இராக் விஷயத்தில் அமெரிக்கர்களின் முழு ஆதரவும் அரசுக்குத் தேவை. இப்போது உள்ள நிலையில்இராக்கிலிருந்து நமது படைகளை திரும்ப அழைக்க முடியாது. அது பின் லேடன் போன்ற தீவிரவாதிகளுக்குவசதியாகப் போய்விடும். இராக் அவர்களது கையில் போய்விடும்.
அமெரிக்காவின் பாதுகாப்பு பாக்தாதில் நடந்து வரும் மோதல்களில் நாம் பெறும் வெற்றியில் தான்அடங்கியிருக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் இப்போது தான் தொடங்கியுள்ளது.
இப்போது நடப்பது நாகரீங்களுக்களுக்கான போர். இதில் நாம் வென்றாக வேண்டும். எதிர் வரும் காலத்தில்அமெரிக்காவுக்கு நிறைய சங்கடங்கள் வரும். இந்த வரலாற்று சோதனைகளை வெல்ல நாம் ஒன்று பட்டு போராடவேண்டியது அவசியம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications