சேலம், மதுரைக்கு பெண் மேயர்கள்
சென்னை:
சேலம், மதுரை மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சித்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.மேலும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் புதிய முறைஇந்த தேர்தலில் கொண்டு வரப்படுகிறது. இதனால் மேயர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது. வெற்றி பெறும்கவுன்சிலர்கேள மேயர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்துகளில் பெண் வார்டுகள், தனி வார்டுகள், எத்தனை,பொதுவான வார்டுகள் எத்தனை என்பதை அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சியின மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சேலம் மாநகாட்சி மேயர்பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
கடந்த இரு முறையும் திருநெல்வேலி, திருச்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.
நடைபெறவுள்ள தேர்தலில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகள் ஆண்களுக்கும்,சேலம், மதுரை பெண்களுக்கும் ஒதக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications