வெளியுறவு அமைச்சர் பதவி-கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு
டெல்லி:
வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு கரண் சிங் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வரும் மகாராஷ்டிரஆளுநருமான கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இராக் எண்ணெய் விவகாரத்தில் நட்வர் சிங் வெளியுறவு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமாசெய்ததை தொடர்ந்து அந்தப் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.மூத்த காங்கிரஸ் தலைவர் கரன் சிங் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில்பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப.சிதம்பரம்ஆகியோரில் ஒருவர் அந்தப் பதவிக்கு மாற்றப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் இந்தப் பதவியைப் பிடிக்க மகாராஷ்டி ஆளுநரும் முன்னாள் கர்நாடக முதல்வருமானஎஸ்.எம்.கிருஷ்ணாவும் தீவிரம் காட்டி வருகிறார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த, சிறந்த நிர்வாகத் திறமைகொண்ட கிருஷ்ணாவை அவரது விருப்பத்தையும் மீறித்தான் ஆளுநராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
கர்நாடகத்தில் தேவே கெளடாவுக்கு பெரும் தலைவலி தரும் தலைவர் கிருஷ்ணா. காங்கிரஸ்-கெளடா இணைந்துகூட்டணி ஆட்சியமைத்தபோது கிருஷ்ணாவால் அரசுக்கு சிக்கல் வரலாம் என்பதால் அவரை ஆளுநராக்கிவிட்டுதரம்சிங்கை முதல்வராக்கினார்.
ஆனால், கெளடாவோ ஒரு மாபெரும் அரசியல் டிராமா நடத்தி, காங்கிரஸை காலை வாரிவிட்டுவிட்டு தனதுமகனை முதல்வராக்க பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இதனால் தன்னை மீண்டும் தீவிர அரசியல் பணிக்குஅனுப்புமாறும், மத்திய அமைச்சர் பதவி அல்லது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்குமாறும் கோரிவருகிறார் கிருஷ்ணா.
இந் நிலையில் பிரேசில், கியூபா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் 18ம்தேதி நாடு திரும்புகிறார். இதையடுத்து 19 அல்லது 20ம் தேதி புதிய வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்படுவார்என்று தெரிகிறது.
இந்தப் பதவிக்கு கிருஷ்ணாவை நியமிக்கும் யோசனையும் காங்கிரஸ் வசம் உள்ளது.
அதே நேரத்தில் சிவராஜ் பட்டீலால் உள்துறையை சரியாக நிர்வகிக்க முடியவில்லை. தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து வரும் நிலையில் குற்றவாளிகள் சிக்காமல் தப்பி வருவது மத்திய அரசுக்கு சங்கடத்தைஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை வெளியுறவுத்துறைக்கு மாற்றிவிடும் திட்டமும் பிரதமரிடம் உள்ளதாகக்கூறப்படுகிறது.
ஆனால், சிவராஜ் பாட்டீல் சோனியாவுக்கு மிக நெருக்கமானவராக இருப்பதால் அவரை அசைப்பது அவ்வளவுஎளிதல்ல. அதே போல ப.சிதம்பரத்தை நிதித்துறையை விட்டு மாற்ற மன்மோகன் சிங் விரும்பவில்லை.
இதனால் வெளியுறவு துறை அமைச்சர் பதவிக்கு கரன்சிங், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரது பெயர்களேதீவிரமாக அடிபடுகின்றன.
இதே போல அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என்றுகூறப்படுகிறது. தெலுங்கானா ராஷ்ட்டீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், நரேந்திரா ஆகியோர்ராஜினாமா செய்ததால் அவர்களது துறையும் காலியாகவுள்ளது.
அஜீத் சிங்குக்கு ராவ் வகித்த தொழிலாளர் நலத்துறை கேபினட் அமைச்சர் பதவியும், அவரது கட்சியை சேர்ந்தமெகமூத் மதானிக்கு, நரேந்திரா வகித்த இணையமைச்சர் பதவியும் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
அஜீத் சிங்கை ஆட்சியில் இணைப்பதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப் பிரதேச மாநில தேர்தலில்முலாயம் சிங்குக்கு எதிராக வலுவான கூட்டணியை காங்கிரஸ் அமைக்க திட்டமிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications