அமைதி பேச்சு- பல்டி அடித்த இலங்கை
கொழும்பு:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முடங்கிக் கிடக்கும்அமைதி பேச்சுவார்த்தை நார்வேயில் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும் எனநார்வே தூதர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகநார்வே கூறியுள்ள நிலையில், திடீரென அதை மறுத்துள்ளது இலங்கை அரசு.முன் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை எனஇலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம்பேச்சுவார்த்தையில் குட்டையைக் குழப்பும் தனது வழக்கமான வேலையை இலங்கைஅரசு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த 2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேநார்வே சமரச முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருதரப்பினரும் பல சுற்று பேச்சு நடத்தினர். கடைசியாக ஸ்வீடனில் நடைபெறுவதாகஇருந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஐரோப்பியயூனியன், புலிகள் அமைப்பை தடை செய்ததால் அதிருப்தி அடைந்தபுலிகள் அமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்தது.
இந் நிலையில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே சண்டை மூண்டது.இரு தரப்பும் கடுமையாக மோதி வந்தன. இந்த சண்டை சம்பூர், ராணுவ வசம் வந்தபின்னர் ஓய்ந்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். 2லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்தனர்.
இந் நிலையில் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மீண்டும்பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே முயற்சியில இறங்கியது. இதுகுறிதது நார்வேசமரசக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹீம் கூறுகையில,
முன் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அதிபர்அறிவித்துள்ளார். இக் கருத்தை விடுதலைப் புலிகளிடம் தெரிவித்தோம். அவர்களும்பேச்சுவார்த்தையை தொடர ஆர்வமாக உள்ளனர்.
இரு தரப்பினரின் முடிவு குறித்து பிரஸல்ஸ் நகரில் நடந்த நன்கொடையாளர்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில்பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இதன் மூலம்இருதரப்பினருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்என்றார் சோல்ஹீம்.
இதே கருத்தை ஜப்பானிய தூதரும் தெரிவித்தார். எந்த நிபந்தனையும் இல்லாமல்பேச்சு நடத்த இலங்கை அரசும் புலிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஜப்பானிய தூதர்யாசுசி அகாசி தெரிவித்தார்.
இலங்கை திடீர் பல்டி:
ஆனால், இலங்கை அரசு திடீரென வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புலிகளுடன் நாங்கள் முன் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதாகநார்வேயும் பிற நாடுகளும் கூறியிருப்பது தவறு. இந்தப் பேச்சுவார்த்தைக்கே நாங்கள்இன்னும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. இதில் ஏதோ குழப்பம் உள்ளதுஎன்று கூறியுள்ளது.
தமிழ்ச்செல்வன் பேட்டி:
இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில்,தமிழர் தாயகத்தில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலும், ஆக்கிரமிப்பும் தொடரும்நிலையில் போர் நிறுத்தம் அர்த்தமற்றதாகி விட்டதாக உணர்கிறோம்.
இருப்பினும் சமாதான தூதர்களும், சர்வதேச சமுதாயமும் அமைதி முயற்சிகளைவலுப்படுத்த ஆர்வமாக உள்ளன. ஆகவே நாங்களும் போர் நிறுத்த ஒப்பந்த்ததைவலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.
போரை நிறுத்த இலங்கை அரசுன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால்ராணுவம் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். போர் நிறுத்த விதிமுறைகள்அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புபிரகாசமாக இருக்கும்.
அதை விட்டு விட்டு தமிழர் தாயகத்தின் மீது ராணுவம் போரை தொடர்ந்தால், நாட்டின்அனைத்துப் பகுதிகளிலும் போர் பரவுவதை தடுக்க முடியாது. இது முழுமையானபோராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சுகிறேன்.
தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை ராஜபக்ஷே நிராகரித்துள்ளார். அந்தமுடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழர்கள இன உரிமைகளையாரும் மறுக்க மடியாது. ஏதாவது ஒரு கால கட்டத்தில் இதை அனைவரும் ஏற்றுக்கொண்டோக வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.












Click it and Unblock the Notifications