சஸ்பெண்ட் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பிரேம்குமார் வழக்கு
சென்னை:
தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து எஸ்.பி. பிரேம்குமார் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து ஜெயேந்திரர் உள்ளிட்டவர்களை கைதுசெய்தவர் பிரேம்குமார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர் சிபிசிஐடிக்கு மாற்றபபட்டார்.ஆட்சி மாறி திமுக அரசு வந்த பின் அவர் கும்பகோணம் போக்குவரத்துத்துறை ஊழல்தடுப்புப் பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந் நிலையில், சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்ரமணியத்தைசென்னை அரசு பொது மருத்துவமனையில் சந்தித்து அவரை தப்பி ஓடுமாறுதூண்டியதாக பிரேம்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து பிரேம்குமார்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந் நிலையில், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதீமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் பிரேம்குமார்.
அதில், 1981-82ம் ஆண்டுகளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில நான் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். அப்போது வீடு காலி செய்வது தொடர்பாகநல்லகாமன் என்பவருக்கும், பைரவசிங் எனபவருக்கும் இடையே பிரச்சினைஏற்பட்டது. அதில் நான் நடவடிக்கை எடுத்தேன். எனக்கு எதிராக நல்லகாமன் அளிததபுகாரின் அடிப்படையில், என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிவில் பிரச்சினையில் தலையிட்டதாகவும், போலீஸ் நிலையத்தில் நல்லகாமனைசங்கிலியால் கட்டி வைத்ததாகவும் என் மீது புகார் கூறப்பட்டது. அந்த வழக்கில்எனக்கு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2003ம் ஆண்டு தண்டனைவழங்கி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த அப்பீல் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில்விசாரணையில் உள்ளது. இந் நிலையில் மதுரை நீதிமன்றம் அளித்த தண்டனையின்அடிப்படையில், என் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு செப்டம்பர்1ம் தேதி எனக்கு உள்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து செப்டம்பர் 8ம் தேதி என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவுவெளியிட்டார். அதில் காரணம் தெரிவிக்கப்படவில்லை. சங்கரராமன் கொலைவழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்தை நான் சென்னைமருத்துவமனையில் சந்தித்துப் பேசியதாகவும், தப்பிச் சென்று விடுமாறு அவரிடம்கூறியதாகவும், அதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், பத்திரிகைகளில்செய்தி வெளியானது.
உண்மையில், செப்டம்பர் 4ம் தேதி நான் மருத்துவமனைக்கு சென்றபோது அங்குநான் இருந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த ரவி சுப்பிரமணியம் என்னிடம்பேச முயன்றார். நான் அவரை வெளியேறுமாறு கூறினேன். ஆனால், ரவிசுப்பிரமணியத்தை மிரட்டி எனக்கு எதிராக புகார் வாங்கியுள்ளனர். அதன்அடிபப்டையில் எனனை சஸ்பெண்ட செய்துள்ளனர்.
இதை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார் பிரேம்குமார். இந்த மனு இன்றுவிசாரணைக்கு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications