ஜெ. பேரவையிலிருந்து எஸ்.வி. சண்முகம் நீக்கம்அதிமுகவினர் மிரட்டல்-வீட்டுக்கு பாதுகாப்பு
சென்னை:
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்துபேசிய அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம், ஜெயலலிதா பேரவை துணைசெயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கினால் திமுகவில் சேர வசதியாகப் போய்விடும் என்பதால்சண்முகத்தை கட்சியை விட்டு நீக்காமல் விட்டுள்ளார் ஜெயலலிதா.மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான எஸ்.வி.சண்முகம், மதுரையில்நேற்று நடந்த அரசு விழாவில் திடீரென கலந்து கொண்டார். அத்தோடு நில்லாமல்,அமைச்சர் ஸ்டாலினை சரமாரியாக புகழ்ந்து பேசினார்.
இருண்டு கிடக்கும் தமிழகத்தை பிரகாசமாக்க ஸ்டாலினால்தான் முடியும் என்றுசண்முகம் பேசப் பேச திமுகவினரே பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்
சண்முகத்தின் இந்தப் பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியது.
இந் நிலையில் சண்முகத்தை ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்பொறுப்பிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அதிமுக ஜெயலலிதா பேரவைதுணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து மதுரை மேற்குத் தொகுதி அதிமக சட்டமன்றஉறுப்பினர் எஸ்.வி.சண்முகம் நீக்கப்பட்டுள்ளார்.
அவருடன் ஜெயலலிதா பேரவை தொடர்பாக கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சண்முகத்தை கட்சியை விட்டு நீக்கவில்லை. நீக்கினால் அவர்ஈசியாகப் போய் திமுகவில் சேர்ந்துவிட முடியும். தானாக விலகினால் எம்எல்ஏ பதவிபோய்விடும்.
இதனால் அவரை கட்சியை விட்டு நீக்காமல் விட்டுள்ளார் ஜெயலலிதா.
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை உடைக்கும் வேலையில்உளவுத்துறையை இறக்கிவிட்டார் ஜெயலலிதா.
இந்த முறை திமுகவும் அதே வேலையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே விடுதலைசிறுத்தை எம்எல்ஏக்களை தனக்கு ஆதரவாக வளைத்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.
மதிமுகவில் ஒரு சிலருக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிமுகஎம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியிலும் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கிடையே, ஸ்டாலினை ஆதரித்துப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் உள்ள எஸ்.வி.சண்முகத்தின் வீடுஉள்ள பகுதியில் அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சண்முகம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் அவரதுவீட்டின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் எச்சரித்து கலைந்து போகச்செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications